மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம், கச்சா எண்ணெய்-யின் அதிகப்படியான விலை, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பல பிரச்சனைகளுக்கு நடுவில், இந்திய பங்கு சந்தை புதன்கிழமை சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 850 புள்ளிகளுக்கு அதிகமாக உயர்ந்து 76,929 புள்ளிகள் என்ற உச்சத்தைத் தொட்டது. அதேபோல் நிப்டி 50 குறியீடு 23,836 வரை ஏறி 250 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்வை கண்டுள்ளது.

கடந்த 2 நாட்கள் வர்த்தகத்தில் லார்ஜ்கேப் பங்குகள் மட்டுமே உயர்ந்து வந்த நிலையில் இன்று மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளும் உயர்ந்து, பிஎஸ்இ குறியீடுகளில் 2% வரை வளர்ச்சி பதிவாகியது. மேலும் கடந்த மூன்று வர்த்தக நாளில் மட்டும் சென்செக்ஸ் 2,350 புள்ளிகளுக்கும் மேலாக உயர்ந்துள்ள நிலையில், நிப்டி சுமார் 700 புள்ளிகள் உயர்ந்து 3% வளர்ச்சியை எட்டியுள்ளது.
ஜனவரி மாதம் முதல் பங்குச்சந்தை சில சிறிய சரிவுகளை சந்தித்து வந்தாலும், தொடர்ந்து நிலையான வர்த்தகத்தையே பதிவு செய்து வருகிறது. இப்படியிருக்கையில் ஈரான் மீதான போர் இந்திய பங்குச்சந்தையை ரத்தகளறியாக்கியது. இந்த மோசமான நிலையில் இருந்து கடந்த 3 நாட்களாக மீண்டு வருகிறது.
இந்த திடீர் மாற்றத்திற்கு முக்கியமான காரணம் மதிப்பீடு. ஆம் ஒரு நிறுவனம் அதன் சந்தை மதிப்புக்கும், வருமானத்திற்கும் மத்தியிலான மத்தியிலான அளவீடு பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் தற்போது முதலீடுகள் சந்தைக்கு திரும்பியுள்ளது.
மதிப்பீட்டு சரிவு
சமீப கால சந்தை சரிவினால் பங்குகளின் P/E (Price to Earnings) மதிப்பீடுகள் கணிசமாக குறைந்துள்ளன. தற்போது இந்த மதிப்பீடுகள் நீண்டகால சராசரி அளவை காட்டிலும் குறைவாகவும், கடந்த 5 ஆண்டுகளின் குறைந்த நிலைக்கு அருகிலும் உள்ளது. இதனால் புதிய முதலீட்டுக்கு சந்தை உகந்தாக மாறியுள்ளது.
நிப்டி 50 இன் தற்போதைய P/E 20.2 ஆக உள்ளது, இது 5 ஆண்டு சராசரி அளவு 23-ஐ விட குறைவானது. இது சந்தை அதிக விலை நிலையில் இல்லாமல், சமநிலை அல்லது குறைந்த மதிப்பீட்டில் இருப்பதை காட்டுகிறது.
இதேபோல் நிப்டி மிட்கேப் 150 இல் P/E 30.1 ஆகக் குறைந்து, 5 ஆண்டு சராசரி அளவு 31.8 என்ற முந்தைய மதிப்பீட்டிலிருந்து சாதாரண நிலைக்கு வந்துள்ளது. அதேசமயம், ஸ்மால்கேப் 250 இல் P/E 24.1 ஆகக் குறைந்து, சமீப கால சராசரியை விட குறைவாக உள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய திருத்தம் ஏற்பட்டதைக் காட்டுகிறது.
இது முதலீட்டாளர்களுக்கு என்ன பொருள்?
இந்த நிலை முதலீட்டாளர்களுக்கு முக்கியமான சிக்னலை வழங்குகிறது. முன்பு அதிக விலையில் இருந்த பங்குகள் இப்போது ஒப்பீட்டளவில் மலிவான நிலையில் உள்ளன. இதனால் நீண்டகால முதலீட்டாளர்கள் படிப்படியாக முதலீடு செய்ய ஏற்ற சூழல் உருவாகியுள்ளது.
மேலும், சந்தை தற்போது உச்ச நிலைக்கு அருகில் இல்லாததால், உச்சத்தில் வாங்கும் அபாயம் குறைந்துள்ளது. ஆனால் இது உடனடி ஏற்றத்தைக் குறிக்காது. குறுகிய காலத்தில் மாற்றம் மற்றும் தடுமாற்றம் தொடரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய இது நுழைவு வாயிலாக பார்க்கப்படுகிறது.
பங்கு தேர்வு இன்னும் முக்கியம்
சந்தை மதிப்பீடு குறைந்தாலும், அனைத்து பங்குகளும் நல்ல முதலீடாக மாறிவிடாது. வலுவான நிதியியல் மற்றும் வர்த்தக அடிப்படை கொண்ட நிறுவனங்களைத் தேர்வு செய்வது மிக அவசியம். கண்மூடித்தனமாக முதலீடு செய்வது உங்கள் முதலீட்டை பாதிக்கும்.
வாய்ப்பும், எச்சரிக்கையும் இணைந்த சந்தை
மொத்தத்தில், உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், இந்திய பங்கு சந்தை 3 நாட்களாக மீண்டு வருகிறது. மதிப்பீட்டு சரிவு முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், சரியான திட்டமிடல் மற்றும் பொறுமையுடன் செயல்படுவது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும்.
முக்கிய தரவுகள்
நிப்டி 50
1 ஆண்டு சராசரி P/E: 22.1
2 ஆண்டு சராசரி P/E: 22.2
5 ஆண்டு சராசரி P/E: 22.98
தற்போதைய P/E: 20.2
நிப்டி மிட்கேப் 150
1 ஆண்டு சராசரி P/E: 33.6
2 ஆண்டு சராசரி P/E: 36.8
5 ஆண்டு சராசரி P/E: 31.8
தற்போதைய P/E: 30.14
நிப்டி ஸ்மால்கேப் 250
1 ஆண்டு சராசரி P/E: 30.2
2 ஆண்டு சராசரி P/E: 30.4
5 ஆண்டு சராசரி P/E: 27.7
தற்போதைய P/E: 24.1
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications