அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தரவுகள் மூலம் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை அடுத்த நாணய கொள்கை கூட்டத்திற்கு ஒத்திவைத்துள்ளது. இதன் எதிரொலியாக ஆசிய சந்தையிலும், ஐரோப்பிய சந்தையிலும் முதலீடு அதிகமாகக் குவிந்தது.
ஆசிய, மற்றும் ஐரோப்பிய சந்தையின் சாதகமான வர்த்தகச் சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் உயர்வான நிலையில் இருந்தது. இதன் மூலம் சென்செக்ஸ் குறியீடு இன்று 300 புள்ளிகளுக்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 292.76 புள்ளிகள் வரையில் உயர்ந்து 35,208.14 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 97.25 புள்ளிகள் உயர்ந்து 10,715.50 புள்ளிகள் அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவிடைந்தது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், எஸ்பிஐ, ரிலைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.


Click it and Unblock the Notifications