குஜராத் தேர்தலின் வாக்குபதிவுகள் முடிந்துள்ள நிலையில், வியாழக்கிழமை மாலையில் எக்ஸிட் போல் வெளியானது, வழக்கம் போல் இந்த முறையும் பிஜேபி அதிக இடத்தில் வெற்றி பெறும் என ஆய்வுகள் கூறப்படுகிறது. அதேபோல் 2012ஆம் ஆண்டு தேர்தலை விடவும் காங்கிரஸ் வாக்கு வங்கியின் அளவும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக வெள்ளிக்கிழமை வர்த்தகம் 300 புள்ளிகள் உயர்வில் துவங்கி முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

11.47 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 275.05 புள்ளிகள் உயர்ந்து 33,521.75 புள்ளிகளை அடைந்திருந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று உயர்விலேயே துவங்கி, 91.95 புள்ளிகள் உயர்வில் 10,344.05 புள்ளிகளை எட்டியது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, எச்டிஎப்சி வங்கி, ஆதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்திருந்தது.


Click it and Unblock the Notifications