மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே மிகப்பெரிய உயர்வுடன் துவங்கியதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான நம்பிக்கை உருவாகியுள்ளது. குறிப்பாக இந்த வாரம் பல முக்கியமான அறிவிப்பு, முடிவுகள் முதலீடு சந்தைக்கு தாக்கத்ததை ஏற்படுத்தும் வகையில் அமைய உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வத்துடனும், அதேபோல் மிகுந்த கவனத்துடனும் முதலீடு செய்ய தாயாராகியுள்ளனர்.
இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது, இதேவேளையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை தற்போதைய விலையை காட்டிலும் கூடுதலாக 200 ரூபாய் அதிகரிக்குமா என்ற ஆய்வுகளும், கணிப்புகளும் சூடுப்பிடித்துள்ளது. இதானால் முதலீட்டாளர்கள் திங்கட்கிழமை காலை முதல் பங்குச்சந்தை முதலீட்டு குறித்து ஆர்வமாக உள்ளது.

இதைவிட முக்கியமாக அமெரிக்க பொருளாதாரத்தை திவால் ஆகாமல் காப்பாற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் எதிர்கட்சியான குடியரசுக் கட்சித் தலைவர் மெக்கார்த்தி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க பொருளாதாரம் திவால் ஆவதில் இருந்து தடுக்க அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கான இறுதி இரு-கட்சி மசோதா தயாரித்து நாடாளுமன்றத்தின் முன்னிலையில் வைக்கப்பட உள்ளது. ஜூன் 5 ஆம் தேதிக்குள் கடன் வரம்பை உயர்த்துவதற்கான மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்த மசோதா கட்டாயம் ஒப்புதல் பெறும் என நம்பிக்கை சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் இருப்பதால் பன்னாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு இந்திய சந்தையில் காலையிலேயே அதிகரித்துள்ளது. இதன் வெளிப்பாடு தான் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேலான உயர்வு, உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடும் இன்று அதிகரிக்க சில முக்கியமான காரணமும் உண்டு.
இந்த வாரம் அதாவது மே 31 ஆம் தேதி மத்திய அரசு இந்தியாவின் வருடாந்திர ஜிடிபி தரவுகளை வெளியிட உள்ளது. டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 4.4 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஜூன் 1 ஆம் தேதி S&P Global Manufacturing PMI தரவுகள் வெளியாக உள்ளது. ஏப்ரல் மாதம் இந்தியாவின் PMI குறியீடு 4 மாத உயர்வான 57.2 புள்ளிகளை எட்டியிருந்தது. ஜூன் 2 ஆம் தேதி வங்கிகளின் கடன் மற்றும் டெபாசிட் குறித்த தரவுகள் வெளியாக உள்ளது.
இவை அனைத்திற்கும் மேலாக இந்த வாரம் அதானி போர்ட்ஸ், அதானி டிரான்ஸ்மிஷன், IRCTC, Campus Activewear, DCM, IRCTC, IPCA Laboratories, Jindal Poly Films, Jubilant Pharmova, Natco Pharma, NBCC, NHPC, NIIT, Rail Vikas Nigam, Apollo Hospitals Enterprise போன்ற பல முக்கியமான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ளது. இது கட்டாயம் பங்குச்சந்தை முதலீட்டு அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தக துவக்கத்தில் 63,026 புள்ளிகள் வரையில் உயர்ந்தது. 11 மணியளவில் சென்செக்ஸ் 476.13 புள்ளிகள் உயர்ந்து 62,977.02 புள்ளிகளை எட்டியுள்ளது. மேலும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் அதிகப்படியாக 3.3 சதவீதம் உயர்ந்துள்ளது. பவர் கிரிட், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக், மாருதி சுசூகி, சன் பார்மா ஆகியவை சரிவை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications