சர்வதேச சந்தை வர்த்தகம் இந்தியாவுக்கு மிகவும் சாதகமாக மாறியுள்ளதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தடாலடியாக 550 புள்ளிகள் வரையில் உயர்ந்து வரலாற்று உச்ச அளவான 63583.07 புள்ளிகளை நெருங்கியுள்ளது.
இன்றைய தடாலடி உயர்வுக்கு முக்கியமான காரணம் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் ஜூலை மாத வட்டி உயர்வு குறித்த தகவலை முழுமையாக அறிவிக்காத நிலையில், முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைக்கு பணத்தை திருப்பியுள்ளனர்.

இதேபோல் சீனா, ஐரோப்பிய பொருளாத்தின் வேகமாக மீட்சிக்கு வழியில்லாமல் இருக்கும் வேளையில் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை பத்திர சந்தையில் முதலீடு செய்வதை தவிர்த்து மீண்டும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். இதோடு ஐரோப்பிய மத்திய வங்கி 8வது முறையாக தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ஐரோப்பாவில் பென்ச்மார்க் வட்டி விகிதம் 22 வருட உயர்வான 3.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 466.95 புள்ளிகள் உயர்ந்து 63,384.58 புள்ளிகளை தொட்டு உள்ளது, இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 63,520.36 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது. நிஃப்டி குறியீடு 137.90 புள்ளிகள் உயர்ந்து 18,826.00 புள்ளிகளை எட்டியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் விப்ரோ, டிசிஎஸ், பவர்கிரிட், டெக் மஹிந்திரா ஆகியவை தவிர 26 நிறுவனங்களும் உயர்ந்துள்ளது. அதிகப்படியாக பஜாஜ் பின்சர்வ் 2.21 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு ஓரே நாளில் 2 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்செக்ஸ் 21000 புள்ளிகளின் பெருக்கலில் இயங்கி வருகிறது,. 21000, 42000, 63000 புள்ளிகள், அடுத்த ஸ்டாப் 84000 புள்ளிகளில் தான். என்னை பொறுத்த வரையில் அடுத்த 2 வருடத்தில் சென்செக்ஸ் 84000 புள்ளிகளை தொட்டு விடும், 100000 புள்ளிகள் தான் இந்த தலைமுறை முதலீட்டாளர்களின் முக்கிய மைல்கல் ஆக இருக்கும் என விஜய் கேடியா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications