கச்சா எண்ணெய் விலை மாற்றத்தாலும், மூடிஸ் அமைப்பு இந்திய நாணய மற்றும் முதலீட்டுச் சந்தையின் தரத்தை உயர்த்தியதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்து சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
மூடிஸ் அமைப்பின் தர உயர்வின் எதிரொலிகள் வெள்ளிக்கிழமை காலை வர்த்தகம் துவக்கம் முதலே தெரிய துவங்கியது.

இதன் காரணமாக வியாழக்கிழமை வர்த்தக முடிவில் 33,100 புள்ளிகளில் முடிந்த சென்செக்ஸ் குறியீடு 33,500 புள்ளிகளை வர்த்தகம் துவங்கி சில நிமிடங்களில் எட்டியது.
இதனைத் தொடர்ந்து தொடர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளால் சென்செக்ஸ் குறியீடு மதியம் 2.30 மணி வரையில், 33,500 புள்ளிகளில் இருந்து 33,400 புள்ளிகள் வரையிலான வர்த்தகத்திலேயே இருந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 235.98 புள்ளிகள் உயர்ந்து 33,342.80 புள்ளிகளை அடைந்தது. இதனைத் தொடர்ந்து நிஃப்டி குறியீடு 68.85 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 10,283.60 புள்ளிகளை அடைந்து இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவிற்கு வந்தது.


Click it and Unblock the Notifications