353 புள்ளிகள் ஏற்றம் கண்ட sensex! ஏற்றம் நிலைக்குமா..?

மும்பை: இன்று சென்செக்ஸ் தன் 37,412 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸை ஒட்டி நிறைவடைந்து இருக்கிறது. சென்செக்ஸ் டே சார்ட்டில் மார்ச் 11, 2019 முதல் பாட்டமாகவும், மே 14, 2019 இரண்டாவது பாட்டமாகவும், ஆகஸ்ட் 01, 2019 மூன்றாவது பாட்டமாகவும் அமைந்திருப்பதை பார்க்க முடிகிறது. எனவே வலுவான சப்போர்ட் என்றால் 37,000 தான் ட்ரிபிள் பாட்டமாக நிற்கிறது. ஆக டபுள் டாப்களில் 18 ஏப்ரல் 2019 அன்று சென்செக்ஸ் தொட்ட 39,420 முதல் டாப் புள்ளியாகவும், ஜூன் 03, 2019 40,267 புள்ளிகள் இரண்டாவது மற்றும் பெரிய டாப்பாகவும் அமைந்திருக்கிறது எனச் சொல்லி இருந்தோம்.

இன்று மீண்டும் சென்செக்ஸ் தன் 37,412 புள்ளிகளில் பலப் பரிட்சை நடத்தி இருக்கிறது. எனவே 37,412 என்கிற புள்ளிகளும் சென்செக்ஸின் வலுவான சப்போர்ட் என மீண்டும் உறுதியாகி இருக்கிறது. ஒருவேளை சந்தை நாளை ஏற்றம் காணத் தொடங்கினால் முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக 37,410 புள்ளிகளைக் கடக்க வேண்டி இருக்கும். அதன் பின் தான் பழைய 37,750 புள்ளிகளைக் கடக்க வேண்டி இருக்கும். ஆகவே இந்த இரண்டு புள்ளிகளையும் ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை சரியத் தொடங்கினால் 37,000 முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாக இருக்கும். அதன் பின் வழக்கம் போல 36,400 அடுத்த வலுவான சப்போர்ட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

 353 புள்ளிகள் ஏற்றம் கண்ட sensex! ஏற்றம் நிலைக்குமா..?

இன்று காலை சென்செக்ஸ் 37,233 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி ஏற்றம் கண்டு 37,311 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 353 புள்ளிகள் அதிகம் ஏற்றம் கண்டிருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 11,003 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,029 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 103 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டிருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 24 பங்குகள் ஏற்றத்திலும், 06 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 37 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,615 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,319 பங்குகள் ஏற்றத்திலும், 1,156 பங்குகள் இறக்கத்திலும், 140 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,615 பங்குகளில் 22 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 251 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில், பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பொதுத் துறை வங்கிகள், மீடியா, மெட்டல் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் கூடுதல் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்மா துறை சார் இண்டெக்ஸ் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின. ரிலையன்ஸ், யெஸ் பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

வேதாந்தா, யூபிஎல், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், ஜி எண்டர்டெயின்மெண்ட் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. சன் பார்மா, இந்தியா புல்ஸ் ஹவுசிங், விப்ரோ, டாக்டர் ரெட்டீச் லெபாரட்டரீ, கோல் இந்தியா போன்ற நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.32-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60.51 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

அடுத்த வர்த்தக நாளிலும் சந்தைக்கு தோதான செய்திகள், சந்தை செண்டிமெண்டை பாசிட்டிவ்வாக வைத்திருக்கும் செய்திகள் வந்தால் தான், ஏற்றம் நிலைக்கும் என்கிறார்கள் அனலிஸ்டுகள். ஆகவே முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் ஜாக்கிரதையாக வர்த்தகங்களை மேற் கொள்ளவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+