மும்பை: இதற்கு முந்தைய கணிப்புகளில், 38,700 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸில் இருந்து சரியும் சென்செக்ஸ் சுமார் 1,290 புள்ளிகள் இறக்கம் காணலாம். அப்படிக் கண்டால் 37,410 தான் நமக்கு அடுத்த வலுவான சப்போர்ட்டாக இருக்கும் எனச் சொல்லி இருந்தோம். அதோடு 37,410 உடைபடும் பட்சத்தில் அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக 37,000 புள்ளிகள் செயல்படும் எனவும் சொல்லி இருந்தோம். நாம் கணித்த படியே சென்செக்ஸ் தன் 37,410 சப்போர்ட்டை உடைத்துக் கொண்டு இன்று 37,000 புள்ளிகளில் சப்போர்ட் எடுத்து 37,018 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.
சென்செக்ஸ் தன் 37,500 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸுக்குக் கீழ் நிறைவடைவது, மே 17, 2019-க்குப் பின் இது மூன்றாவது முறை. கடந்த மே 20, 2019 முதல் ஜூலை 08, 2019 வரைக்குமான சென்செக்ஸ் டே சார்ட்டில், ஒரு டபுள் டாப் மற்றும் ட்ரிபிள் பாட்டம் பேட்டர்ன் உருவாகி இருப்பதாகச் சொல்லி இருந்தோம். அதில் மே 20, 2019 ஒரு பாட்டமாகவும், ஜூன் 17, 2019 ஒரு பாட்டமாகவும், ஜூலை 08, 2019 ஒரு பாட்டமாக இருந்த டபுள் டாப், ட்ரிபிள் பாட்டம் பேட்டன் முழுமையாக சிங்கில் டாப் டபுள் பாட்டமாக மாறி இருக்கிறது.

இத்தனை இறக்கங்களுக்குப் பின்னும், சென்செக்ஸ் டே சார்ட்டில் மார்ச் 11, 2019 முதல் பாட்டமாகவும், மே 14, 2019 இரண்டாவது பாட்டமாகவும், இன்று (ஆகஸ்ட் 01, 2019) மூன்றாவது பாட்டமாகவும் அமைந்திருப்பதை பார்க்க முடிகிறது. எனவே வலுவான சப்போர்ட் என்றால் 37,000 தான் ட்ரிபிள் பாட்டமாக நிற்கிறது. ஆக டபுள் டாப்களில் 18 ஏப்ரல் 2019 அன்று சென்செக்ஸ் தொட்ட 39,420 முதல் டாப் புள்ளியாகவும், ஜூன் 03, 2019 40,267 புள்ளிகள் இரண்டாவது மற்றும் பெரிய டாப்பாகவும் அமைந்திருக்கிறது.

எனவே சென்செக்ஸ் தன் 37,000 என்கிற வலுவான சப்போர்ட் புள்ளிகளை உடைத்தால் சுமார் 1,210 புள்ளிகள் வரை சரிந்து 35,790 வரை தொடலாம். எனவே 37,000 என்கிற சப்போர்ட் உடைபட்டால் 36,590 தான் முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அதை சென்செக்ஸ் வாராந்திர சார்ட்டும் உறுதி செய்கிறது. அப்படி அதுவும் உடைபட்டால் 36,000 புள்ளிகள் தான் அடுத்த மிக மிக வலுவான சப்போர்ட்டாக கண்ணில் படுகிறது.
இன்று காலை சென்செக்ஸ் 37,387 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு 37,018 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட 462 புள்ளிகள் சரிவு. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 11,060 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 10,980 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 138 புள்ளிகள் இறக்கம் கண்டிருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 07 பங்குகள் ஏற்றத்திலும், 23 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 11 பங்குகள் ஏற்றத்திலும், 38 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. ஒரு பங்கு மாற்றம் இன்றியும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,588 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 837 பங்குகள் ஏற்றத்திலும், 1,607 பங்குகள் இறக்கத்திலும், 144 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,588 பங்குகளில் 105 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 265 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் ஆட்டோமொபைல், எனர்ஜி போன்ற இண்டெக்ஸ்கள் ஃப்ளாட்டாக வர்த்தகமாயின. மற்ற அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் வர்த்தகமாயின. மீடியா, மெட்டல் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் கொஞ்சம் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின. இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.
பார்தி இன்ஃப்ராடெல், விப்ரோ, மாருதி சுசிகி, பவர் கிரிட் கர்ப்பரேஷன், ஈஷர் மோட்டார்ஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. வேதாந்தா, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ போன்ற நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 69.09 டாலராக வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 64.37 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications