37,410-ஐ சப்போர்ட் எடுத்த Sensex!நாளையாவது 37,500-ஐத் தொடுமா..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: சென்செக்ஸ் தன் 37,500 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸுக்குக் கீழ் நிறைவடைவது, மே 17, 2019-க்குப் பின் இது இரண்டாவது முறை. கடந்த மே 20, 2019 முதல் ஜூலை 08, 2019 வரைக்குமான சென்செக்ஸ் டே சார்ட்டில், ஒரு டபுள் டாப் மற்றும் ட்ரிபிள் பாட்டம் பேட்டர்ன் உருவாகி இருப்பதாகச் சொல்லி இருந்தோம். இந்த டபுள் டாப் புள்ளிகள் மாறுபட்டாலும், ட்ரிபிள் பாட்டம் புள்ளிகளில் இரண்டு புள்ளிகள் 38,700 புள்ளிகளில் நிலை கொண்டிருப்பதாகவும் சொல்லி இருந்தோம். அதோடு மே 19, 2019 அன்றைக்கான கேண்டிலின் பாதியில் அளவும் இந்த 38,700 என்பதால் தான் 38,700 வலுவான ரெசிஸ்டென்ஸாக அமைகிறது.

38,700 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸில் இருந்து சரியும் சென்செக்ஸ் சுமார் 1,290 புள்ளிகள் இறக்கம் காணலாம். அப்படிக் கண்டால் 37,410 தான் நமக்கு அடுத்த வலுவான சப்போர்ட்டாக இருக்கும் எனச் சொல்லி இருந்தோம். அதோடு 37,410 உடைபடும் பட்சத்தில் அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக 37,000 புள்ளிகள் செயல்படும் எனச் சொல்லி இருந்தோம்.

37,410-ஐ சப்போர்ட் எடுத்த Sensex!நாளையாவது 37,500-ஐத் தொடுமா..?

நாம் நேற்று கணித்த படியே சென்செக்ஸ் தன் 37,410 சப்போர்ட்டை ஒட்டி 37,397 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இந்த இறக்கம் நாளையும் தொடருமானால் 37,000 புள்ளிகள் தான் அடுத்த வலுவான சப்போர்ட்டாக நிற்கும் எனச் சொல்லி இருந்தோம். ஆனால் இறக்கம் காணாமல் சந்தை கொஞ்சம் வலு பெற்று மீண்டும் 37,410-ஐ வலுவான சப்போர்ட் எடுத்து 37,480 புள்ளிகளுக்கு சந்தை நிறைவடைந்து இருக்கிறது. ஒருவேளை நாளையும் சந்தை ஏற்றம் கண்டால் 37,750 முதல் வலுவான ரெசிஸ்டென்ஸாகவும், 38,000 இரண்டாவது மற்றும் மிக வலுவான ரெசிஸ்டென்ஸாகவும் அமையும் என எதிர்பார்க்கலாம்.

இன்று காலை சென்செக்ஸ் 37,257 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு 37,481 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட 83 புள்ளிகள் ஏற்றம். அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 11,034 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,118 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 32 புள்ளிகள் ஏற்றம் கண்டிருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 21 பங்குகள் ஏற்றத்திலும், 09 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 37 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,633 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,120 பங்குகள் ஏற்றத்திலும், 1,385 பங்குகள் இறக்கத்திலும், 128 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,623 பங்குகளில் 19 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 740 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் மீடியா, ரியாலிட்டி துறை மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாயின. மற்ற அனைத்து துறை சார் பங்குகளும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆக்ஸிஸ் பேங்க், யெஸ் பேங்க், ரிலையன்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ஐ ஓ சி, ஹீரோ மோட்டோகார்ப், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஜி எண்டர்டெயின்மெண்ட், ஆக்ஸிஸ் பேங்க், பார்தி ஏர்டெல், டைடன் கம்பெனி பார்த்ஹி இன்ஃப்ராடெல் போன்ற நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex takes support at 37410 mark today

sensex takes support at 37410 mark today
Story first published: Wednesday, July 31, 2019, 18:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X