பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex! பாதாளத்தில் விழுந்த Nifty!

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 39,058 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு 38,337 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. பட்ஜெட் அறிவித்த ஜூலை 05, 2019-க்குப் பிறகு 38,500-க்கு கீழ் சென்செக்ஸ் நிறைவடையவில்லை. இன்று 38,337-க்கு வர்த்தகம் நிறைவடைந்திருப்பது தான் முதல் முறை. நேற்றைய குளோசிங் புள்ளியை விட 560 புள்ளிகள் சரிந்து இன்று வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,627 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,419 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 177 புள்ளிகள் கூடுதலாக சரிந்திருக்கிறது. சென்செக்ஸை போலவே நிஃப்டியும் பட்ஜெட்க்குப் பிறகு 11,450 புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகம் நிறைவடைந்திருப்பது இதுவே முதல் முறை.

பட்ஜெட் உச்சத்தில் இருந்து 1695 புள்ளிகள் சரிவு கண்ட Sensex! பாதாளத்தில் விழுந்த Nifty!

ஜூலை 05, 2019 அன்று மத்திய அரசின் 2019 - 20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் சென்செக்ஸ் 40,032 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. அந்த உச்சத்தில் இருந்து இன்றைய இறக்கம் வரைக் கணக்கிட்டால், செனெக்ஸ் 1695 புள்ளிகள் சரிந்திருக்கிறது. அதே போல நிஃப்டியில் பட்ஜெட் அன்று 11,981 என்கிற உச்ச புள்ளியில் இருந்து இன்றைய குளோசிங் புள்ளிகளான 11,419 புள்ளிகளுக்கு சரிந்திருக்கிறது. இதைக் கணக்கிட்டால் சுமார் 562 புள்ளிகள் சரிந்திருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 26 பங்குகள் இறக்கத்திலும், 04 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 43 பங்குகள் இறக்கத்திலும், 07 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,671 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 619 பங்குகள் ஏற்றத்திலும், 1,919 பங்குகள் இறக்கத்திலும், 133 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,671 பங்குகளில் 22 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 517 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டியில் அனைத்து துறை சார்ந்த பங்குகளும் இறக்கத்தில் வர்த்தகமாயின. ஆட்டோமொபைல், மீடியா, தனியார் வக்கிகள் போன்ற துறை சார் பங்குகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் யெஸ் பேங்க், ரிலையன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச் டி எஃப் சி, எஸ்பிஐ போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

என் டி பி சி, டைடன் கம்பெனி, கோல் இந்தியா, டிசிஎஸ், பிபிசிஎல் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. டிசிஎஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ச், ஈஷர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.

ஜூலை 18, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் 0.27% வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஜூலை 19, 2019-ல் ஐரோப்பிய சந்தைகளில் லண்டனின் எஃப்.டி.எஸ்.இ 0.15%, பிரான்சின் சி ஏ சி 0.11% , ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் -0.10% வர்த்தகமாகி வருகின்றன. ஆசிய பங்குச் சந்தைகளில் அனைத்து நாட்டு சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக ஜப்பானின் நிக்கி 2.00% ஏற்றத்தில் வர்த்தகமானது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.80 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 62.83 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+