300 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. என்ன காரணம்..?

அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகளுக்கு மத்தியில் நிலவும் பிரச்சனைகள் ஆசிய சந்தையை அதிகளவில் பாதித்துள்ளது. பலவேறு காரணங்களுக்காகப் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீடுகள் தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தால் இன்று மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.

தொடர்ந்து 3வது நாளாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 300 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களைப் பதம்பார்த்துள்ளது.

சர்வதேச சந்தைகள்

சர்வதேச சந்தைகள்

அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகள் மத்தியில் நிலவும் பிரச்சனைகள் இரு நாடுகள் மத்தியில் போர் மூண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாக்கும் நோக்கிய வெளிநாடுகளில் சந்தைகளில் இருந்து திரும்பப் பெறுகின்றனர்.

இதுமட்டும் அல்லாமல் இந்திய சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் பங்குச்சந்தையில் அதிகளவில் தெரிகிறது.

 

எஸ்பிஐ

எஸ்பிஐ

இத்தகைய இக்காட்டான சூழ்நிலையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இன்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.

இவ்வங்கியின் லாபம் 3 மடங்கு அதிகரித்திருந்தாலும், வராக்கடன் அளவு 9 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்த முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

 

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்திய சந்தையிலும், வங்கிகளிலும் ஏற்கனவே அதிகளவிலான பணப்புழக்கம் இருக்கும் போது பணவீக்கம் அதிகரிக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்தது. இது சந்தையில் எவ்விதமான மாற்றங்களையும் ஏற்படுத்தாத காரணத்தால் பங்குச்சந்தையிலும் முதலீடு அதிகரிக்கவில்லை.

தொடர் சரிவு

தொடர் சரிவு

இந்தியாவில் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் அதிகளவிலான லாபத்தை அளிக்காத காரணத்தாலும், அமெரிக்கா, வட கொரியா பிரிச்சனைகளுடம் சேர்த்து இந்திய சந்தையை அதிகளவில் பாதித்தது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 317.74 புள்ளிகள் சரிந்து 31,213.59 புள்ளிகளை அடைந்துள்ளது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடு தொடர் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 109.45 புள்ளிகள் சரிந்து 9,710.80 புள்ளிகளை அடைந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+