இந்தியாவில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவற்றின் மூலம் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு தனது நிதி இலக்குகளை ஒத்துவைத்து விட்டு, 50,000 கோடி ரூபாயை கூடுதலாகச் செலவிட முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 65.14 ரூபாய் வரையில் சரிந்தது.
இதன் எதிரொலிகளால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தாறுமாறாகச் சரிந்து மொத்த சந்தையும் ரத்தகளறியானது.
இந்திய பொருளாதாரம்
ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 2 சதவீதம் வரையில் சரிந்து 5.7 சதவீதமாத சரிந்து காணப்பட்டது. இது கிட்டத்தட்ட 3 வருட சரிவு.
மத்திய அரசு ஒரு தவறை மறை மீண்டும், மீண்டும் புதுப்புது நடவடிக்கைகள் அமலாக்கம் செய்த காரணத்தால் நாட்டின் வர்த்தகச் சந்தை அதிகளவில் பாதித்தது.
ரூபாய் மதிப்பு
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி பங்குச்சந்தையை மட்டும் அல்லாமல் நாணய சந்தையிலும் அதிகளவிலான பாதிப்புகளைக் கண்டுள்ளது.
கடந்த 2 மாதங்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், ஜூன் காலாண்டின் பொருளாதார வளர்ச்சி தரவுகள், OECD இன்று வெளியிட்டுள்ள பொருளாதார வளர்ச்சி கணிப்புகள் ஆகியவை ரூபாய் மதிப்பை ஏப்ரல் மாதம் சரிவிற்குக் கொண்டு சென்றது.
65 ரூபாய்..
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகப்படியாக 65.15 ரூபாயாகக் குறைந்துள்ளது.
அமெரிக்க வட கொரியா
இரு நாடுகள் மத்தியிலான போர் பதற்றம் அதிகரித்துத் தற்போது சற்று தணிந்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்தது.
தற்போது நாட்டின் பொருளாதாரத் தரவுகள் மூலம் மொத்த சந்தையும் தலைகீழாக மாறியது.
சாதகமான வாய்ப்புகள்
அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது முடிவில் இருந்து பின்வாங்கி எவ்விதமான மாற்றமும் இல்லை அறிவித்தது. இது இந்திய சந்தைக்குச் சாதகமான சூழ்நிலையாகக் கருதப்பட்ட நிலையில் 50,000 கோடி ரூபாய் செலவின அறிவிப்புகள் பங்குச்சந்தையைக் கவிழ்த்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 447.60 புள்ளிகள் வரையில் சரிந்து 31,922.44 புள்ளிகளை அடைந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சென்செக்ஸ் சுமார் 1.38 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை விடவும் நிஃப்டி குறியீடு 1.56 சதவீதம் அளவிற்குச் சரிந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 157.50 புள்ளிகள் சரிந்து 9,964.40 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் மூழ்கடித்தது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications