600 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..! அடி வாங்கும் நிஃப்டி!

மும்பை: தற்போது சென்செக்ஸ் தன் 37,000 என்கிற வலுவான சப்போர்ட்டை இழந்து சுமார் 36,972 புள்ளிகள் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளிகளை விட சுமார் 600 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. காலை 37,755 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு தற்போது 36,972 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட தற்போதைய நிலவரப்படி சுமார் 600 புள்ளிகள் அதிகம் சரிந்து இருக்கிறது.

600 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..! அடி வாங்கும் நிஃப்டி!

அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 11,139 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போத் சுமார் 175 புள்ளிகள் சரிந்து 10,935 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிக் கொண்டிருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட தற்போதைய நிலவரப்படி சுமார் 175 புள்ளிகள் இறக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சென்செக்ஸில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் 30 பங்குகளில் 03 பங்குகள் ஏற்றத்திலும், 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. இன்று நிஃப்டியில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் 50 பங்குகளில் 06 பங்குகள் ஏற்றத்திலும், 44 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில், எனர்ஜி இண்டெக்ஸ் தவிர மற்ற அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. ரிலையன்ஸ், யெஸ் பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹெச் டி எஃப் சி போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தியா புல்ஸ் ஹவுசிங், ரிலையன்ஸ், சம் பார்மா, கெயில், டைட்டன் கம்பெனி போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. யெஸ் பேங்க், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, யூ பி எல், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.26 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 58.36 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

இன்னும் சில நிமிடங்களில் சந்தை நிறைவு அடையப் போகிறது. அதற்குள் மீண்டும் 600 புள்ளிகள் ஏற்றம் கண்டு பாசிட்டிவாக வர்த்தகம் நிறைவு அடைவது சாத்தியமில்லை என்கிற பயத்தில் மேலும் இறக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+