இந்திய பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் முதன் முறையாக 33,117 புள்ளிகளைத் தொட்ட புதிய உச்சத்தினைத் தொட்டது. இன்று காலை பங்குச் சந்தை துவங்கிய உடன் 500 புள்ளிகள் வரை உயர்ந்து இந்த உச்சத்தினை அடைந்தது.
ஆனால் இந்த உயர்வு சில மணி நேரங்கள் கூட நீட்டிக்கவில்லை. காலை 10:35 மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 0.73 சதவீதம் அதாவது 236.32 புள்ளிகள் உயர்ந்து 32,844.34 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
அதே நேரம் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 0.45 சதவீதம் அதாவது 48 புள்ளிகள் வரை உயர்ந்து 10,255.75 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
காரணம்
நேற்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் பொதுத் துறை வங்கிகளுக்கு 2.11 லட்சம் கோடி மதிப்பிலான மறு மூலதன திட்டத்தினை அறிவித்ததே இதற்கான காரணமாகும். இன்று பங்கு சந்தைத் துவங்கியதன் முதல் பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் 20 முதல் 30 சதவீதம் வரை வளர்ச்சியைக் கண்டுள்ளன.
பஞ்சால் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகள் 31.21 சதவீதம் அதாவது 181.20 புள்ளிகள் உயர்ந்து 181.20 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.
பாங்க் ஆப் பரோடா
பாங்க் ஆப் பரோடா நிறுவனப் பங்குகள் 22.56 சதவீதம் அதாவது 32.30 புள்ளிகள் உயர்ந்து 175.45 ரூபாய் 1 பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.
பாங்க் ஆப் இந்தியா
பாங்க் ஆப் இந்தியா நிறுவன பங்குகள் 21.18 சதவீதம் அதாவது 32.75 புள்ளிகள் உயர்ந்து 175.90 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா
யூனியன் பாங்க் ஆப் இந்தியா நிறுவனப் பங்குகள் 21.24 சதவீதம் அதாவது 27.90 புள்ளிகள் உயர்ந்து 159.25 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.
கனரா வங்கி
கனரா வங்கி பங்குகள் 19.55 சதவீதம் அதாவது 62.55 புள்ளிகள் உயர்ந்து 379.75 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.
நட்டம் அளித்துள்ள பங்குகள்
கோடக் வங்கி (-3.73%), எச்டிஎப்சி வங்கி (-2.94%), எச்டிஎப்சி (-2.21%), ஏஷியன் பெயின்ட்ஸ் (-0.19%) மற்றும் அதானி போர்ட்ஸ் (-0.17%)


Click it and Unblock the Notifications