இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் ஏறுமா, இறங்குமா? இந்த 8 விஷயத்துலதான் தலையெழுத்தே இருக்கு..?

கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன. இதனால் இந்த வாரம் பங்கு வர்த்தகத்தின் போக்கு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது. மோடி-டிரம்ப் சந்திப்பு, ரூபாய் மதிப்பு, நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகள் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்றைய காலை வர்த்தக சரிவுக்கு மிக முக்கியமான காரணம் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து செய்யும் பங்கு விற்பனை தான்.

இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் ஏறுமா, இறங்குமா? இந்த 8 விஷயத்துலதான் தலையெழுத்தே இருக்கு..?

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு பயணமாக இந்த வாரம் அமெரிக்காவுக்கு செல்கிறார். பிப்ரவரி12-13ம் தேதிகளில் அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அந்நாட்டின் மூத்த அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளார்.அப்போது பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பின் விளைவாக வெளியிடப்படும் எந்தவொரு அறிவிப்பும் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை நன்றாக இருந்தால்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி மற்றும் பொருளாதார கொள்கைகளின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும். பாஜக தலைமையிலான அரசாங்கத்தின்கீழ் கொள்கை முன்னறிவிப்பு காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீட்டை குவிக்க வாய்ப்புள்ளது.

பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் எய்ஷர் மோட்டார்ஸ், வருண் பீவரேஜ், வோடஃபோன் ஐடியா, இர்கான் இண்டர்நேஷனல்,செயில், ஐஆர்சிடிசி உள்பட 2,000க்ககும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. இது சந்தையின் போக்கினை முடிவு செய்யும் முக்கிய காரணியாக இருக்கும்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அன்னிய முதலீட்டாளர்கள் நிகர அடிப்படையில் ரூ.479.4 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் நிகர அடிப்படையில் ரூ.454.20 கோடிக்கு பங்குகளை வாங்கி இருந்தனர். இந்த வாரம் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வதை காட்டிலும் முதலீடு செய்ய அதிக வாய்ப்புள்ளது.

டெக்னிக்கல் ரீதியாக இந்த வாரம், நிப்டிக்கு, குறையும் போது வாங்குவது என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

ரிசர்வ் வங்கி கடந்த வாரம் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்ததையடுத்து, அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 87.42க்கு மேல் வர்த்தகமானது. ரூபாய் மதிப்பில் சிறிய ஏற்ற இருந்தபோதிலும், அன்னிய முதலீடு வரத்து மற்றும் சர்வதேச சந்தை உணர்வை பொறுத்து ரூபாயின் வெளிமதிப்பு 87.25-87.60 என்ற வரம்பில் வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 3 வாரங்களாக சரிவு கண்டு வந்த கச்சா எண்ணெய் விலை, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீது விதிக்கப்பட்ட புதிய தடைகளின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.5 சதவீதம் உயர்ந்து 74.66 டாலராக இருந்தது. வரும் நாட்களில் கச்சா எண்ணெய் உயர்ந்தால் அது பங்குச் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஐடிசி மற்றும் கொச்சின் ஷிப்யார்ட் போன்ற நிறுவன பங்குகளின் டிவிடெண்ட், போனஸ் பங்குகள், பங்கு பிரிப்பு உள்ளிட்ட நிறுவன நடவடிக்கைகளுக்கான பதிவு தேதிகள் நெருங்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்குகள் மீது முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+