பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு முடிந்த பின்பு வெளியான எக்சிட் போல் முடிவுகள் பங்குசந்தை வர்த்தகத்தில் நேரடியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியப் பங்குச் சந்தை துறையில் இன்று (ஜூன் 3, 2024) பதிவான 3 சதவீத உயர்வு, ஜனவரி 2021 க்குப் பிறகு பதிவான சாதனை அளவீடாகும். ஜனவரி 2, 2021 ஆம் தேதி சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு 5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகிய இரண்டு முக்கிய பங்குச் சந்தை குறியீடுகளும் இன்று கிட்டத்தட்ட 4 சதவீதம் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, இரு குறியீடுகளும் 3 சதவீத உயர்வுடன் வர்த்தகத்தை முடித்துள்ளது மூலம் முதலீட்டாளர்களுக்குக் கொண்டாட்ட மழையாக இருக்கிறது.
சென்செக்ஸ் 2,622 புள்ளிகள் அதிகரித்து 76,583.29 என்ற புள்ளியில் இன்று திறந்தது, முந்தைய நாள் முடிவு 73,961.31 ஆக இருந்தது. இதனைத் தொடர்ந்து 2,778 புள்ளிகள் அதாவது 3.8 சதவீதம் உயர்ந்து தனது புதிய உச்சபட்சமான 76,738.89 என்ற புள்ளியை தொட்டது.
சென்செக்ஸில் உள்ள 30 நிறுவனங்களின் பங்குகளில், 25 பங்குகள் லாபத்தில் இருந்த நிலையில், இன்றைய நாள் முடிவில் சென்செக்ஸ் 2,507 புள்ளிகள் அதாவது 3.39 சதவீதம் உயர்ந்து 76,468.78 என்ற புள்ளியில் முடிவடைந்தது.
இதேபோல் நிஃப்டி 50 (Nifty 50) குறியீடு வெள்ளிக்கிழமை முடிவான 22,530.70 என்ற புள்ளியில் இருந்து 807 புள்ளிகள் அதிகரித்து 23,337.90 என்ற புள்ளியில் இன்று திறந்தது. இதைத் தொடர்ந்து 808 புள்ளிகள் அதாவது 3.6 சதவீதம் உயர்ந்து தனது புதிய உச்சபட்சமான 23,338.70 என்ற புள்ளியை ஆரம்பக் கட்ட வர்த்தகத்தில் தொட்டது. இன்றைய நாள் முடிவில் நிஃப்டி 50, 733 புள்ளிகள் அதாவது 3.25 சதவீதம் உயர்ந்து 23,263.90 என்ற புள்ளியில் முடிவடைந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பங்குச் சந்தை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளனர். இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் மொத்த பங்குகளின் மதிப்பு 412 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 426 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்த அமோகமான உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறினாலும் எக்சிட் போல் முடிவுகள் மிகவும் முக்கிய காரணமாக உள்ளது. இந்த உயர்வு, பல்வேறு துறைகளைச் சார்ந்த முன்னணி நிறுவனங்களின் பங்குகள் புதிய உச்சத்தைத் தொட்டதே முதன்மை காரணம்.
ரியலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), Larsen & Toubro, மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (Mahindra & Mahindra), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), என்டிபிசி (NTPC) மற்றும் பவர் கிரிட் (Power Grid) போன்ற முக்கிய பங்குகளோடு சுமார் 284 பங்குகள் இன்று புதிய 52 வார உச்சத்தைத் தொட்டன.
இது மட்டுமல்லாமல், BSE மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் புதிய உயரத்தை எட்டியுள்ளன. ஆனால் வர்த்தகம் முடியும் நேரத்தில் கணிசமாகக் குறைந்து முடிந்தன.
BSE மிட்கேப் குறியீடு அதன் புதிய உச்சபட்சமான 44560.97 என்ற புள்ளியைத் தொட்ட போதிலும், இறுதியில் 3.54 சதவீதம் உயர்ந்து 44,367.67 என்ற புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல், BSE ஸ்மால்கேப் குறியீடு அதன் புதிய உச்சபட்சமான 48,973.96 என்ற புள்ளியைத் தொட்ட போதிலும், இறுதியில் 2.05 சதவீதம் உயர்ந்து 48,232.30 என்ற புள்ளியில் முடிவடைந்தது.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications