புதிய உச்சத்தில் சென்செக்ஸ்..! அடுத்த இலக்கு 41,250..!

உலகம் முழுக்க, பங்குச் சந்தையில் நிலவும் ஒரு பாசிட்டிவ் தன்மை, எல்லா செக்டார்களிலும் வர்த்தகம் சிறப்பாக நடந்தது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72 ரூபாய்க்குள்ளேயே இருப்பது, சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் இருக்கும் பெரும்பாலான பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமாவது என பல நல்ல விஷயங்கள் இன்று நடந்தது. விளைவு சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் தன் வாழ்நாள் உச்சத்தில் நிறைவு அடைந்து இருக்கிறது.

சென்செக்ஸ் டே சார்ட்டில் கடந்த 08 நவம்பர் 2019, 20 நவம்பர் 2019, 25 நவம்பர் 2019 என மூன்று நாட்களும் ஒரு கப் அண்ட் சாசர் பேட்டனை உருவாக்கி இருக்கிறது. இந்த பேட்டனின் உச்ச புள்ளியாக 40,750 புள்ளிகள் தான் இருந்தது. ஆனால் இன்றைய வர்த்தகம், 40,889 புள்ளிகளில் நிறைவடைந்து இருப்பதால், அந்த பேட்டனையும் சேர்த்து உடைத்து இருக்கிறது. எனவே சென்செக்ஸிலொரு ஏற்ற டிரெண்ட் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

புதிய உச்சத்தில் சென்செக்ஸ்..! அடுத்த இலக்கு 41,250..!

எனவே, சந்தை நாளையும் இந்த மொமெண்டத்தில், ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால் 41,250 முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம். இதுவரை சென்செக்ஸ் தொட்ட உச்ச புள்ளிகள் அனைத்தையும் கடந்து இன்று சென்செக்ஸ் ஒரு புதிய உச்சத்தில் நிறைவடைந்து இருப்பது மற்றும் புதிய இண்ட்ரா டே ஹை புள்ளிகளைக் கொடுத்து இருப்பது கவனிக்கத் தக்கது.

நாளை ஏதாவது நெகட்டிவ் செய்தி வந்து, சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 40,650 முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பின், அடுத்த வலுவான சப்போர்ட்டாக 40,500 புள்ளிகளை எடுத்துக் கொள்ளலாம். என்ன தான் இறக்கம் கண்டாலும் 40,500-க்குக் கீழ் இறக்கம் காண்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

நேற்று மாலை சென்செக்ஸ் 40,359 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,439 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,889 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 529 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

இன்று காலை நிஃப்டி 11,922 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 12,073 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 159 புள்ளி ஏற்றம் கண்டு இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 28 பங்குகள் ஏற்றத்திலும், 02 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,707 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,413 ஏற்றத்திலும், 1,086 பங்குகள் இறக்கத்திலும், 208 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,707 பங்குகளில் 47 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 126 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

பார்தி இன்ஃப்ராடெல், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, க்ராசிம் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஜி எண்டர்டெயின்மெண்ட், ஓ என் ஜி சி, யெஸ் பேங்க், பாரத் பெட்ரோலியம், கெயில் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+