நேற்று மாலை சென்செக்ஸ் 40,469 என்கிற புதிய உச்சத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,625 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,653 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. இது சென்செக்ஸின் வாழ் நாள் உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 183 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
அதே போல நிஃப்டி நேற்று மாலை 11,966 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 12,021 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 12,012 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இது நிஃப்டி 50 இண்டெக்ஸின் வாழ் நாள் உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 46 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,711 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,319 பங்குகள் ஏற்றத்திலும், 1,203 பங்குகள் இறக்கத்திலும், 189 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,711 பங்குகளில் 68 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 119 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் ஆட்டோ, பொதுத் துறை வங்கிகள் தவிர மற்ற அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மெட்டல், ரியாலிட்டி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின.
பார்தி ஏர்டெல், சன் பார்மா, இண்டஸ் இண்ட் பேங்க், வேதாந்தா, ஹிண்டால்கோ போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. யூபிஎல், கெயில், யெஸ் பேங்க், பாரத் பெட்ரோலீயம், ஹிந்துஸ்தான் யுனிலிவர் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
எது எப்படியோ... சென்செக்ஸ் தினம் தினம் புதிய புதிய உச்சங்களைத் தொடும், பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் அத்தனை சந்தோஷம். எல்லாம் சரி, இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நாளை (நவம்பர் 08, 2019, வெள்ளிக்கிழமை) சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீண்டும் புதிய உச்சங்களைத் தொடுமா என பொறுத்திருந்து பார்ப்போம்..!
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications