ஜூலை மாதத்தில் கார்பரேட் நிறுவனங்கள் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிடும் நிலையில், உள்நாட்டுப் பங்குச்சந்தையில் லாபகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து உயர்வுடன் காணப்பட்டு வராலாரு காணாத வகையில் சென்செக்ஸ் குறியீடு 31,730 புள்ளிகள் வரை அடைந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
கார்பரேட் நிறுவனங்கள்
இந்திய சந்தையில் கார்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியீடு உள்நாட்டு முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் வெளிநாட்டுச் சந்தை முதலீட்டாளர்களையும் அதிகளவில் கவரும் ஒன்று.
மேலும் ஜூலை 13ஆம் தேதி டிசிஎஸ் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது.
முக்கியத் துறைகள்
இன்றைய வர்த்தகத்தில் டெக்னாலஜி, ஐடி, ரியலிட்டி, பொதுத்துறை நிறுவனங்கள், ஹெல்த்கேர் மற்றும் வங்கி துறைகள் அதிகளவிலான வர்த்தகத்தை அடைத்து சுமார் 1.58 சதவீதம் வரையிலான வளர்ச்சியைப் பதிவு செய்தது.
சென்செக்ஸ்
இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் தொடர்ந்து உயர்வை சந்தித்த சென்செக்ஸ் குறியீடு 355.01 புள்ளிகள் உயர்ந்து 31,715.64 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை அடைந்தது.
அதுவு ஐரோப்பிய சந்தை துவக்கத்திற்குப் பின் அதிகளவிலான உயர்வை சந்தித்தது சென்செக்ஸ்.
நிஃப்டி
இன்று தேசிய பங்குச்சந்தையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வர்த்தகத் துவக்கத்தில் மந்தமான வர்த்தகத்தைப் பெற்ற நிலையில், இயல்பு நிலைக்குத் திரும்பிய பின் தொடர் உயர்வை மட்டுமே சந்தித்தது நிஃப்டி குறியீடு
ஓரே நாளில்...
இதன் படி நிஃப்டி குறியீடு ஓரே நாளில் சுமார் 97.25 புள்ளிகள் உயர்ந்து 9,763.05 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications