2019-ல் சம்பாதித்தவைகள் எல்லாம் காலி..! சரிவின் உச்சத்தில் சென்செக்ஸ்..!

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், தன் வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து இருப்பது, சவுதி அராம்கோ நிறுவனத்தின் மீது நடந்த தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக் கொண்டு இருப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பலவீனமாகவே இருப்பது போன்ற காரணங்களால் சந்தை மேலும் சரிந்து வர்த்தகமாகி வருகிறது.

இன்று காலை சென்செக்ஸ் 36,613 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கி காலை 10.45 மணி அளவில் சந்தை தன் இன்றைய நாளுக்கான இறக்கப் புள்ளியான 36,205-ஐத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. தற்போது சுமார் 275 புள்ளிகள் இறக்கம் கண்டு 36,288 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ஜனவரி 01, 2019 அன்று சென்செக்ஸ் இண்டெக்ஸ் 36,161 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

2019-ல் சம்பாதித்தவைகள் எல்லாம் காலி..! சரிவின் உச்சத்தில் சென்செக்ஸ்..!

05 ஆகஸ்ட் 2019, 23 ஆகஸ்ட் 2019, 04 செப்டம்பர் 2019, 17 செப்டம்பர் 2019 ஆகிய வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் தன் 36,400 என்கிற வலுவான சப்போர்ட் மீது பலப் பரிட்சை நடத்தி இருக்கிறது. நான்கு முறை பலப் பரிட்சை நடத்தித் தோற்ற சப்போர்ட் என்பதால் இறக்கம் மேலும் கொஞ்சம் வலுவாகத் தான் இருக்கும் எனச் சொல்கிறது சென்செக்ஸ் டே சார்ட்.

சென்செக்ஸ் தற்போது அதிகபட்சமாக 37,750 என்கிற லெவல்களைத் தான் கடந்த ஜூலை 30, 2019-க்குப் பிறகு தொட்டு வர்த்தகமாகி இருக்கிறது. எனவே அதிகபட்சமாக 35,050 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிய வாய்ப்புகள் இருப்பதாக டே சார்ட் சொல்கிறது.

சென்செக்ஸ் இண்டெக்ஸுக்கு இன்றைய சப்போர்ட் புள்ளியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் 36,160 தான் முதல் சப்போர்ட்டாகத் தெரிகிறது. அதையும் உடைத்துக் கொண்டு கீழ் நோக்கி வர்த்தகமானால் 36,000-த்தை அடுத்த வலுவான சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ளலாம். இந்த சூழலில் சந்தை ஏற்றம் காணும் என்கிற நம்பிக்கை இல்லை. இருப்பினும் ஏதாவது நல்ல செய்தி வந்தால் 37,000 முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும்.

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் வர்த்தகமாகும் 30 பங்குகளில் 05 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 25 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. போகிற போக்கைப் பார்த்தால் எப்படியாவது 36,150 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவு அடைவதே பெரிய விஷயம் போலத் தோன்றுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+