நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நடப்பு வாரத்தில் இந்திய சந்தையில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால், சந்தையில் அதிகளவிலான ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு கொரோனா குறித்தான அறிவிப்புகள் சற்று குறைந்ததாக காணப்பட்டாலும், சில மாநிலங்களில் உச்சம் தொட்டு வருகின்றது.
முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம்
ஆக இது இன்னும் பொருளாதாரத்தில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்த உள்ளதோ என்ற அச்சத்தினையும், சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து வரும் வாரத்தில் அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், ஆசிய சந்தைகளும் சற்று சரிவில் காணப்படுகிறது. இதனால் இந்திய சந்தையிலும் ஏற்ற இறக்கம் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 147.44 புள்ளிகள் அதிகரித்து, 50,687.92 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 21.40 புள்ளிகள் அதிகரித்து, 15196.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 232.01 புள்ளிகள் அதிகரித்து, 50,772.49 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 43.40 புள்ளிகள் அதிகரித்து, 15,218.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1453 பங்குகள் ஏற்றத்திலும், 357 பங்குகள் சரிவிலும், 88 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப், பவர் கிரிட் கார்ப், ஐஓசி, எஸ்பிஐ, டிவிஸ் லேப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கிரசிம், ஹிண்டால்கோ, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், எம்&எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், எஸ்பிஐ, லார்சன், மாருதி சுசூகி, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே, டைட்டன் நிறுவனம், இந்தஸிந்த் வங்கி, பஜாஜ் பின்செர்வ், எம்&எம், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.86 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையானது 72.83 ரூபாயாக இருந்தது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 101 புள்ளிகள் அதிகரித்து, 50,700.80 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 18.45 புள்ளிகள் அதிகரித்து, 15,193.75 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications