சர்வதேச அளவில் இருந்து வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் நேற்று சென்செக்ஸ் பலத்த சரிவினைக் கண்டு, பின்னர் முடிவில் ஏற்றத்தினைக் கண்டது.
இதற்கிடையில் இன்று இரண்டாவது நாளாக தொடர்ச்சியாக ஏற்றத்தினைக் கண்டு வருகின்றது.
ஆனால் இன்று ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே ஏற்றத்திலேயே தொடங்கியுள்ள நிலையில், தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளது.
சந்தை நிலவரம்
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 166 புள்ளிகள் அதிகரித்து 45,719 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 51 புள்ளிகள் அதிகரித்து, 13,379 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.89 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது கடந்த செவ்வாய்கிழமையன்று 73.84 ரூபாயாக முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
நிஃப்டி பங்குகள்
அதோடு இன்று நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஆயில் & கேஸ், பேங்க் நிஃப்டி குறியீடுகள் தவிர, மீதமுள்ள அனைத்து குறியீடுகளும் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள விப்ரோ, சிப்லா, எம்&எம், மாருதி சுசூகி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ஓஎன்ஜிசி, டிவிஸ் லேப்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எம்&எம், மாருதி சுசூகி, பஜாஜ் பைனான்ஸ், இன்ஃபோசிஸ், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ஓஎன்ஜிசி, பவர் கிரிட் கார்ப், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
என்ன காரணம்
சர்வதேச அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற நிலையின் காரணமாக சர்வதேச பங்கு சந்தைகள் நேற்று பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளன. குறிப்பாக ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. இதன் காரணமாக இந்திய சந்தையும் ஏற்றத்திலேயே காணப்படுகிறது.
தற்போதைய நிலவரம்
தற்போது சென்செக்ஸ் 231 புள்ளிகள் அதிகரித்து, 46,237 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 67 புள்ளிகள் அதிகரித்து, 13,533 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
கச்சா எண்ணெய் இருப்பு அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியான நிலையில், இதுவும் இந்திய சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications