பரபரப்பான அமெரிக்கா தேர்தல் எதிர்பார்ப்புகள்.. ஏற்றப் பாதையில் சென்செக்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று உலகமே மிகப் பரப்பரப்பாக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் ஒரு விஷயம் அமெரிக்கா தேர்தல் முடிவுகள். தற்போது வெளியாகி வரும் முடிவுகள் பலரும் எதிர்பார்த்தபடியே ஜனநாய கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக வந்து கொண்டுள்ளது.

டிரம்புக்கு கொரோனாவினால் தான் இந்த பின்னடைவு என்றாலும், இந்த தேர்தலில்யார் வெற்றி பெற்றாலும், அமெரிக்காவுக்கு விரைவில் ஊக்கத் தொகை குறித்தான முடிவுகள் வரலாம். பல பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகள் இருக்கலாம். வட்டி விகிதம் மாறாமல் இருக்கலாம் என்ற உணர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இதன் காரணமாக அமெரிக்கா சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தைகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.

பரபரப்பான அமெரிக்கா தேர்தல் எதிர்பார்ப்புகள்.. ஏற்றப் பாதையில் சென்செக்ஸ்..!

கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள், இன்று ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 256 புள்ளிகள் அதிகரித்து 40,517 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 64 புள்ளிகள் அதிகரித்து, 11,878 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.

கடந்த சில தினங்களாகவே சரிவினைக் கண்டு வந்த அனைத்து குறியீடுகளும், இன்று சில குறியீடுகள் தவிர நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பல குறியீடுகளும் இன்று பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது. எனினும் பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ் உள்ளிட்ட இண்டெக்ஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சற்று சரிவில் காணப்படுகிறது.

இதற்கிடையில் நிஃப்டி குறியீட்டில் உள்ள சன் பார்மா, இன்ஃபோசிஸ், இந்தஸ்இந்த் வங்கி, விப்ரோ, பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதுவே யுபிஎல், ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிண்டால்கோ, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சன் பார்மா, இன்ஃபோசிஸ், இந்தஸ்இந்த் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிண்டால்கோ, பவர் கிரிட் கார்ப், பார்தி ஏரெடெல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.

அமெரிக்காவில் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் கணிப்புகள், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று வலுவடைந்து காணப்படுகிறது. இதற்கிடையில் ஐடி பங்குகள் நல்ல ஏற்றத்தில் காணப்படுவதால், ஐடி துறை சார்ந்த குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகிறது.
.
அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.71 ரூபாயாகவே சரிவில் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex trade above 250 points amid US election

Market update.. Sensex trade up to 256 points amid US election
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X