வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.
இன்று காலை ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 74.80 புள்ளிகள் அதிகரித்து, 49,826 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 76.30 சற்று அதிகரித்து, 14,784 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதற்கிடையில் தொடக்கத்தில் சென்செக்ஸ் 123.31 புள்ளிகள் அதிகரித்து, 49,874.80 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 36 புள்ளிகள் அதிகரித்து, 14,743.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 931 பங்குகள் ஏற்றத்திலும், இதே 272 பங்குகள் சரிவிலும், 46 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இந்திய ரூபாய்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 9 பைசா அதிகரித்து 72.37 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது கட்னத செவ்வாய்கிழமையன்று 72.46 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இது சந்தையில் வாங்குவது அதிகரித்துள்ள நிலையில், சந்தை ஏற்றத்தினை கண்டு வருகிறது.
இந்தியாவின் ஜிடிபி
இந்தியாவின் ஜிடிபி விகிதம் 1.3% வளர்ச்சி கண்டு இருக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். முதல் இரண்டு காலாண்டுகளானது கொரோனாவின் காரணமாக வீழ்ச்சியினை சந்தித்தது. எனினும் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், மக்கள் செலவிடுவதும் அதிகரித்துள்ளது. தேவையும் மீண்டு வருகிறது. இதற்கிடையில் நான்காவது காலாண்டில் ஜிடிபி விகிதம் வழக்கம் போல வளர்ச்சியினை காணலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பணவீக்கம் அதிகரிக்கலாம்
அமெரிக்க பத்திர சந்தைகள் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருவது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் பணவீக்கம் அதிகரிக்க வழிவகுக்குமோ என்ற உணர்வும் நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் பங்கு சந்தைகள் கடந்த சில தினங்களாக சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள, பெரும்பாலான குறியீடுகளில் நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக் தவிர, மற்றவை பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக கோல் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டிசிஎஸ், கெயில், பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டிசிஎஸ், பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஹெச்யுஎல், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
தற்போது சென்செக்ஸ் 331.86 புள்ளிகள் அதிகரித்து, 50,083 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 112.65 புள்ளிகள் அதிகரித்து, 14,820.45 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இதற்கிடையில் நாளை எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் சந்தை ஏற்ற இறக்கத்தினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வர்த்தகர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.
More From GoodReturns

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!



Click it and Unblock the Notifications