ஏறிய வேகத்தில் இறங்கி வரும் சென்செக்ஸ்.. நிஃப்டியின் நிலவரம் என்ன.. பட்ஜெட்டின் தாக்கமா..!
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 4வது பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று காலை அமர்வில் பங்கு சந்தையானது நல்ல ஏற்றத்தினை கண்டது. எனினும் பிற்பாதியில் ஏறிய வேகத்தில் இறக்கம் கண்டு வருகின்றது.

காலை அமர்வில் 900 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், தற்போது (1.05 மணி நிலவரப்படி) 384.91 புள்ளிகள் அதிகரித்து, 58,399.08 புள்ளிகளாக காணப்படுகின்றது.
இதே போல நிஃப்டி 87.75 புள்ளிகள் அதிகரித்து, 17,430.55 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இன்று காலை முதல் கொண்டே பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகி வந்த சந்தையானது, தற்போது மிகப்பெரிய ஏற்ற இறக்கத்தினை காணத் தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications