பட்டையை கிளப்பி வரும் பங்கு சந்தைகள்.. 400 புள்ளிகள் ஏற்றத்திற்கு மேல் சென்செக்ஸ்..!

இன்றைய இந்திய பங்கு சந்தைகள் சர்வதேச பங்கு சந்தையின் எதிரொலியாக, தொடக்கத்திலேயே முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக 401.27 புள்ளிகள் ஏற்றத்திலேயே தொடங்கியது. இதே நிஃப்டி 109.20 புள்ளிகள் அதிகரித்து 11,356 ஆக தொடங்கியது.

இந்தஸிந்த் வங்கி, பஜாஜ் ஆட்டோ மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் டாக்டர் ரெட்டி லேப்ஸ் உள்ளிட்ட பங்குகளும் ஆக்டிவ் பங்குகளாகவும் உள்ளன.

பட்டையை கிளப்பி வரும் பங்கு சந்தைகள்.. 400 புள்ளிகள் ஏற்றத்திற்கு மேல் சென்செக்ஸ்..!

இதே வங்கித் துறை, ஆட்டோ, ஐடி மற்றும் பார்மா உள்ளிட்ட குறியீடுகள் தலா ஒரு சதவீத ஏற்றத்திலும், இதே மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் அரை சதவீத ஏற்றத்துடனும் உள்ளன.

தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கிய மும்பை பங்கு சந்தையின் சென்சென்ஸ் தற்போது 425 புள்ளிகள் ஏற்றத்தில் 38,493 ஆக வர்த்தகமாகி வருகின்றது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டியானது 140 புள்ளிகள் அதிகரித்து, 11,388 ஆக வர்த்தகமாகி வருகின்றது.

இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 73.57 ரூபாயாக காணப்படுகின்றது.

இதில் குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 1% ஏற்றத்துடன் காணப்படுகிறது. இது அமெரிக்காவின் சில்வர் லேக் நிறுவனம், ரிலையன்ஸ் ரீடெயில் வர்த்தகத்தில் மீண்டும் 1,875 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த பங்கின் விலையானது ஏற்றத்தில் காணப்படுகிறது.

இதே மத்திய அரசு லாக்டவுனில் படிப்படியான தளர்வுகளை அளித்து வரும் நிலையில், இந்த முறை அறிவிப்பில், அக்டோபர் 15 முதல் தியேட்டர்கள் இயங்க அனுமதி கொடுத்துள்ளது. பல மாதங்களாகவே லாக்டவுன் காரணமாக முடங்கிபோன தியேட்டர்களுக்கு 50% ஆக்கிரமிப்புகளுடன் இயங்கலாம் என அனுமதி கொடுத்துள்ளது. இதன் காரணமாக தியேட்டர் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டு வருகின்றன. குறிப்பாக பிவிஆர் மற்றும் ஐனாக்ஸ் லெய்ஷர் முறையே 15% மற்றும் 17% ஏற்றத்தில் காணப்படுகிறது.

இதே பொதுத்துறை நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா பங்குகள் 3% வீழ்ச்சியில் காணப்படுகின்றன. இது அரசு இயற்கை எரிவாயுவின் விலையை 25% குறைத்ததையடுத்து இந்த வீழ்ச்சி கண்டுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+