கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வரும் இந்திய பங்கு சந்தையில், இன்று பலமான ஏற்றத்தில் தான் உள்ளன.
இந்த நிலையில் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சர்வதேச சந்தைகளின் எதிரொலியாக, தொடக்கம் முதல் கொண்டே ஏற்றம் கண்டு வருகின்றது.
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் குறியீட்டென் சென்செக்ஸ் தொடக்கத்தில் 254.11 புள்ளிகள் அதிகரித்து, 46,698 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 71.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 13,6726 ஆகவும் தொடங்கியது.

ரூபாய் Vs டாலர்
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா அதிகரித்து, 73.66 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 73.76 ரூபாயாக முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தைகள் ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இந்திய சந்தைக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பும் ஏற்றத்தினை காணத் தொடங்கியுள்ளது. ஆக இதுவும் முதலீட்டாளர்களுக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

என்ன காரணம்?
தொடர்ச்சியாக புதிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தாலும், அமெரிக்க பொருளாதாரத்தினை மீட்டெடுக்க 900 பில்லியன் டாலர் அளவிலான ஊக்கத்தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆக இது சற்று பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகளும் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ளன. ஆக இதுவும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது.

பச்சை நிறத்தில் குறியீடுகள்
முதலீட்டாளர்களின் இந்த நம்பிக்கையினால், நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி தவிர, மீதமுள்ள அனைத்து இன்டெக்ஸ்களும் பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்இ கன்ஸ் கூட்ஸ், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாகவும், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் உள்ளிட்ட சில குறியிடூகள் மற்றவை 1% மேலாகவும் வர்த்தகமாகி வருகின்றன. மற்றவை 1% கீழாக வர்த்தகமாகி வருகின்றன.

நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பஜாஜ் ஆட்டோ, கெயில் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இன்ஃபோசிஸ், நெஸ்டில், விப்ரோ, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, ஆக்ஸிஸ் வங்கி, என்டிபிசி, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இன்ஃபோசிஸ், நெஸ்டில், ஏசியன் பெயின்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போது சந்தை நிலவரம் என்ன?
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 345 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 46,789 ஆகவும், இதே நிஃப்டி 102 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 13,703 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது முன்னதாக 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டு தற்போது சற்று குறைந்துள்ளது.
உண்மையில் இது முதலீட்டாளர்களுக்கு புராபிட் புக்கிங் செய்ய நல்ல வாய்ப்பு தான்.