துளிர்விட்ட நம்பிக்கை.. குறையும் கொரோனா பாதிப்பு.. சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம்..!

உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் என்பது, அடுத்தடுத்த அலையாக விஸ்வரூபம் எடுத்து அதிவேகமாக பரவி வருகின்றது. இதற்கிடையில் இந்தியாவில் பரவி வரும் கொரோனாவின் தாக்கம் என்பது சற்றே குறையத் தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்றே நம்பிக்கையை கொடுத்துள்ளது எனலாம்.

குறிப்பாக இந்தியாவில் அதன் தாக்கம் உலக நாடுகளே திரும்பி பார்க்கும் அளவுக்கு சமீபத்திய வாரங்களாக அதிகரித்து வந்தது. இதற்கிடையில் நிபுணர்களும் இந்தியாவில் மூன்றாம் கட்ட பரவலும் தொடரும் என எச்சரித்திருந்தனர்.

எனினும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய மாநில அரசும் பல்வேறு விதமான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

குறிப்பாக சில ,மாநிலங்களில் முழு லாக்டவுனும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பொருளாதார வளர்ச்சியில் மீண்டும் விரைவில் எழுச்சி காணலாம். தொழிற்துறைகள் இயல்பு நிலைக்கு திரும்பலாம். அன்னிய முதலீடுகள் அதிகரிக்கலாம் என்ற பல காரணங்களுக்கு நடுவே, பல நிறுவனங்களின் மார்ச் காலாண்டு அறிக்கையும் இன்று வெளியாகவுள்ளது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்ற் ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 267.46 புள்ளிகள் அதிகரித்து, 49,000 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 74.10 புள்ளிகள் அதிகரித்தும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 264.38 புள்ளிகள் அதிகரித்து, 48,996.93 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 76 புள்ளிகள் அதிகரித்து, 14,753.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1296 பங்குகள் சற்று ஏற்றத்திலும், 264 பங்குகள் சரிவிலும், 75 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ மெட்டல்ஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் தவிர மற்றவை பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள யுபிஎல், இந்தஸிந்த் வங்கி, அதானி போர்ட்ஸ், பஜாஜ் பின்செர்வ், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சிப்லா, டாடா ஸ்டீல், லார்சன், ஜே எஸ் டபள்யூ, என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் வங்கி, பஜாஜ் பின்செர்வ், எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே, லார்சன், டைட்டன் நிறுவனம், என்டிபிசி, பார்தி ஏர்டெல், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 73.27 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 73.29 ரூபாயாக முடிவடைந்திருந்தது.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 454.80 புள்ளிகள் அதிகரித்து, 49,187 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 121.75 புள்ளிகள் அதிகரித்து, 14,799.85 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+