கடந்த சில வாரங்களாகவே சென்செக்ஸ் 46,000 மேல் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று சற்று சரிவினைக் கண்ட நிலையில், இன்றும் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் தொடக்கத்திலேயே 177.80 புள்ளிகள் அதிகரித்து, 46,440.97 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 71.10 புள்ளிகள் அதிகரித்து, 13,639 ஆகவும் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக பேங்க் நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ மெட்டல்ஸ், நிஃப்டி பிஎஸ்இ குறியீடுகள் 1% மேலான ஏற்றத்திலும், இதே மற்ற குறியீடுகள் 1% கீழாகவும் ஏற்றத்தில் உள்ளன.

இதற்கிடையில் சர்வதேச பங்கு சந்தைகள் அனைத்தும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள எம்&எம், ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ஈச்சர் மோட்டார்ஸ், டெக் மகேந்திரா, எஸ் பி ஐ லைஃப் இன்சூரன்ஸ், டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், கெயில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எம்&எம், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், நெஸ்டில், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும் டெக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இன்று சர்வதேச சந்தைகளும் நல்ல ஏற்றத்தில் காணப்பட்ட நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையும் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.. குறிப்பாக கொரோனா தடுப்பு மருந்து பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், இதன் மூலம் சரிந்து போன பொருளாதாரத்தினை விரைவில் மீட்டெடுக்க முடியும். அதோடு ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்புகளும் சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், அதுவும் சந்தைக்கு சாதகமாகவே வந்து கொண்டுள்ளது. இதுவும் பங்கு சந்தைகளில் முதலீடுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன.
தொடந்து அன்னிய முதலீடுகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதே நேரம் உள்நாட்டு முதலீட்டாளர்களும் தங்களது முதலீடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகவும் சந்தை இன்று மீண்டும் ஏற்றத்தினை காண ஆரம்பித்துள்ளது.
.
தற்போது சென்செக்ஸ் 261 புள்ளிகள் அதிகரித்து 46,524 ஆகவும், இதே நிஃப்டி 71 புள்ளிகள் அதிகரித்து, 13,639 ஆகவும் காணப்படுகிறது. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பும் 17 அதிகரித்து 73.47 ரூபாயாக காணப்படுகிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications