நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்றும், இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன.
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 401.93 புள்ளிகள் அதிகரித்து, 50,251.77 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 196 புள்ளிகள் அதிகரித்து, 14,957.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதற்கிடையில் இன்று தொடக்கத்தில் சென்செக்ஸ் 296.31 புள்ளிகள் அதிகரித்து, 50,146.15 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 87.80 புள்ளிகள் அதிகரித்து, 14,849.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1021 பங்குகள் ஏற்றத்திலும், 249 பங்குகள் சரிந்தும், 51 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக், பிஎஸ்இ ஆயில் & கேஸ் கிட்டதட்ட 2% ஏற்றத்திலும் மற்றவை 1% வரையிலும் காணப்படுகின்றன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பிபிசிஎல், என்டிபிசி, ஐஓசி, டெக் மகேந்திரா, எம்&எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓஎன்ஜிசி, ஹிண்டால்கோ, ஹெச்டிஎஃப்சி, ஈச்சர் மோட்டார்ஸ், யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என்டிபிசி, எம்&எம், டெக் மகேந்திரா, டெக் மகேந்திரா, எம்&எம், பஜாஜ் பைனான்ஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா அதிகரித்து 73.35 ரூபாயாக தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் முடிவு விலையானது 73.55 ரூபாயாக இருந்தது.
சர்வதேச சந்தையில் நிலவி நேர்மறையான ஏற்றத்தில் உள்ள நிலையில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் 10 வருட பத்திர லாபமானது வலுவாக காணப்படும் நிலையில், டாலரின் மதிப்பு சற்று வலுவாக உள்ள நிலையில், சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதன் காரணமாக இந்திய சந்தைகள் இன்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 473.17 புள்ளிகள் அதிகரித்து, 50,323.01 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 143.20 புள்ளிகள் அதிகரித்து, 14,904.20 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications