நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. நேற்று பலமான சரிவினைக் கண்ட நிலையில், இன்று மீண்டு சரிவானது தொடருகிறது.
இது நேற்றைய முடிவில் அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாத வரலாற்று உச்சத்தில் இருந்து 10% வீழ்ச்சி கண்டுள்ளது. இது அதிகரித்து வரும் பத்திர லாபத்தின் மத்தியில் பலத்த வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது.
ஏனெனில் ரிஸ்கியான முதலீடுகளை தவிர்த்து முதலீட்டாளர்கள் நல்ல லாபம் கொடுக்க கூடிய அரசாங்க பத்திரங்களை நாட தொடங்கியுள்ளனர்.
ஆசிய பங்கு சந்தைகள் சரிவு
இதனால் ஆசிய பங்கு சந்தைகளும் இன்று காலை தொடக்கத்திலேயே சற்று சரிவில் காணப்படுகிறது. மேலும் டாலரின் மதிப்பும் மூன்று மாத உயரத்தினை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய பங்கு சந்தைகள் 1%மும், ஜப்பானின் நிக்கி பங்கு சந்தை குறியீடு 0.7% சரிவிலும், சியோலில் 0.24%மும் இ-மினி எஸ் & பி 0.04% சரிவிலும் காணப்பட்டன.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 200 புள்ளிகள் குறைந்து, 50,635 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி சற்று குறைந்து, 15,100 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 400.18 புள்ளிகள் குறைந்து, 50,445.90 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 108.30 புள்ளிகள் குறைந்து, 14,972.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள சில குறியீடுகள் தவிர, பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, கெயில், அல்ட்ராடெக் சிமெண்ட், பிபிசிஎல், எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸிந்த் வங்கி, விப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, அல்ட்ராடெக் சிமெண்ட், எம் & எம், ஹெச் சிஎல் டெக், என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே, இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.97 ரூபாயாக தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் முடிவு விலையானது 73.36 ரூபாயாக இருந்தது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 37 புள்ளிகள் குறைந்து, 50,808.27 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 12.95 புள்ளிகள் குறைந்து, 15,067.80 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications