வாரத்தின் நான் காவது வர்த்தக நாளான இன்று இந்திய சந்தைகள் பலமான ஏற்றத்தில் காணப்படுகிறது. அதிலும் இன்று எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தினை சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 567.71 புள்ளிகள் அதிகரித்து, 51,349.40 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 168.90 புள்ளிகள் அதிகரித்து, 15,150.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதற்கிடையில் தொடக்கத்தில் சென்செக்ஸ் 450.78 புள்ளிகள் அதிகரித்து, 51,232.47 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 132 புள்ளிகள் அதிகரித்து, 15,114 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1000 பங்குகள் ஏற்றத்திலும், இதே 203 பங்குகள் சரிவிலும், 50 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இந்திய ரூபாய்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது பெரியளவில் மாற்றமின்றி 72.30 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வில் 72.32 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இது சந்தையில் வாங்குவது அதிகரித்துள்ள நிலையில், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வருகிறது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக ஹிண்டால்கோ, யுபிஎல், ஆக்ஸிஸ் வங்கி, இந்தஸிந்த் வங்கி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே நெஸ்டில், ஹீரோ மோட்டோகார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், பிரிட்டானியா, ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸிந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், சன் பார்மா, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே நெஸ்டில், அல்ட்ராடெக் சிமெண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
தற்போது சென்செக்ஸ் 433.70 புள்ளிகள் அதிகரித்து, 51,215.39 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 145.05 புள்ளிகள் அதிகரித்து, 15,127.05 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இன்று எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் சந்தை ஏற்ற இறக்கத்தினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வர்த்தகர்கள் இருப்பது நல்லது.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications