நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த சில அமர்வுகளாகவே சர்வதேச காரணிகள் மற்றும் எஃப்&ஓ எக்ஸ்பெய்ரி காரணமாக சந்தை பலமான ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்தது.
இதற்கிடையில் இன்று காலை தொடக்கத்திலேயே ஏற்றத்தில் தொடங்கியுள்ளது. வார இறுதி வர்த்தக நாள் என்பதால் இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
நேற்றைய முடிவில் அமெரிக்க பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதனையடுத்து இந்திய சந்தையும் ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 194.95 புள்ளிகள் அதிகரித்து, 51.310.17 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 39.80 புள்ளிகள் அதிகரித்து, 15,377.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் 291.44 புள்ளிகள் அதிகரித்து, 51,406.66 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 99.10 புள்ளிகள் அதிகரித்து, 15,437 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1363 பங்குகள் ஏற்றத்திலும், 419 பங்குகள் சரிவிலும், 60 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
இன்டெக்ஸ்கள்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள சில குறியீடுகள் தவிர, பெரும்பாலான குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஐடி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ ஹெல்த்கேர் உள்ளிட்ட குறியீடுகள் சற்று சரிவிலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஓ.என்.ஜி.சி, ஈச்சர் மோட்டார்ஸ், உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சன் பார்மா, விப்ரோ, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டைட்டன் நிறுவனம், எம்&எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, ஹெச்.டி.எஃப்.சி, பார்தி ஏர்டெல், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே, சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், நெஸ்டில், டைட்டன் நிறுவனம், எம்&எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 10 பைசா அதிகரித்து, 72.48 ரூபாயாக தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் முடிவு விலையானது 72.58 ரூபாயாக இருந்தது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 232.06 புள்ளிகள் அதிகரித்து, 51,347.28 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 79.50 புள்ளிகள் அதிகரித்து, 15,417.35 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications