நான்காவது வர்த்தக நாளான இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மீண்டும், இந்திய சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன.
இன்று ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே சந்தை சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் பெரியளவில் மாற்றமின்றி 1.59 புள்ளிகள் அதிகரித்து, 51,310.90 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 49.30 புள்ளிகள் குறைந்து, 15,057.20 புள்ளிகள் ஆகவும் காணப்பட்டது.
எனினும் சந்தையின் தொடக்கத்தில் சற்று சரிவில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 45.32 புள்ளிகள் குறைந்து, 51,264.07 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 22.70 புள்ளிகள் குறைந்து, 15,083.80 புள்ளிகள் ஆகவும் தொடங்கியது. இதில் 763 பங்குகள் ஏற்றத்திலும், 466 பங்குகள் சரிவிலும், இதே 87 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இதற்கிடையில் நிஃப்டி பிஎஸ்இ, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகிறது. மற்றவை சற்றே ஏற்றத்தில் காணப்படுகிறது.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் ஹிண்டால்கோ, ரிலையன்ஸ், கெயில், பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஈச்சர் மோட்டார்ஸ், என்டிபிசி, டைட்டன் நிறுவனம், ஹீரோமோட்டோகார்ப், டிவிஸ் லேப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டைட்டன் நிறுவனம், ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, ஓஎன்ஜிசி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சர்வதேச அளவில் நிலவி வரும் பல காரணிகளுக்கு மத்தியில், சர்வதேச சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. குறிப்பாக பரவி வரும் புதிய வகை கொரோனாக்கள், தடுப்பூசி, பட்ஜெட் எதிரொலி, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் எதிரொலி, அமெரிக்க சந்தை என பலவும் இந்திய சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 124.95 புள்ளிகள் அதிகரித்து, 51,434.34 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 35.40 புள்ளிகள் அதிகரித்து, 15,141 ஆகவும் காணப்படுகிறது.