நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. நேற்று இந்திய சந்தைகளானது ,மகா சிவராத்திரி என்பதால் விடுமுறை. ஆக இன்று வார இறுதி என்பதால் சற்று ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் சர்வதேச காராணிகள் பலவும் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், பணவீக்கம் அதிகரிக்குமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.
சந்தை நீண்டகால நோக்கில் மீண்டும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கத்தினை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி, முதலீடுகளின் அளவு, வங்கிக் கடன் அளவு, டெபாசிட் வளர்ச்சி உள்ளிட்ட பலவற்றையும் கண்கானித்து வருகின்றனர்.

இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 187.80 புள்ளிகள் அதிகரித்து, 51,467.31 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 58.20 புள்ளிகள் அதிகரித்து, 15,233 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 507.73 புள்ளிகள் அதிகரித்து, 51,787.24 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 136.10 புள்ளிகள் அதிகரித்து, 15,310.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1214 பங்குகள் ஏற்றத்திலும், 297 பங்குகள் சரிவிலும், 97 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ எஃப் எம் சி ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர் உள்ளிட்ட குறியீடுகள் தவிர, மற்ற குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பிபிசிஎல், ஐஓசி, ஜே எஸ் டபள்யூ ஸ்டீல், லார்சன், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், ஹெஸ்டிஎஃப்சி லைஃப், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், லார்சன்,, பஜாஜ் பைனான்ஸ், ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி, உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், சன் பார்மா, நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா அதிகரித்து 72.66 ரூபாயாக தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் முடிவு விலையானது 72.91 ரூபாயாக இருந்தது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 365.01 புள்ளிகள் அதிகரித்து, 51,644.24 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 101.75 புள்ளிகள் அதிகரித்து, 15,276.55 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.