நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 636.32 புள்ளிகள் அதிகரித்து, 49,736.61 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 256.30 புள்ளிகள் அதிகரித்து, 14,785.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதற்கிடையில் இன்று தொடக்கத்தில் சென்செக்ஸ் 494.87 புள்ளிகள் அதிகரித்து, 49,594.86 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 153.70 புள்ளிகள் அதிகரித்து, 14,682.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1297 பங்குகள் ஏற்றத்திலும், 199 பங்குகள் சரிந்தும், 78 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக எம்&எம், ஹீரோ மோட்டோகார்ப், யுபிஎல், டெக் மகேந்திரா, ஓஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பார்தி ஏர்டெல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எம்&எம், டெக் மகேந்திரா, டைட்டன் நிறுவனம், ஓஎன்ஜிசி, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பார்தி ஏர்டெல் டாப் லூசராகவும் உள்ளது.
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 31 பைசா சரிந்து 73.77 ரூபாயாக தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் முடிவு விலையானது 73.46 ரூபாயாக இருந்தது.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் குழப்பமான நிலைக்கு மத்தியில், சந்தை தற்போது ஏற்றத்தில் காணப்படுகிறது. முந்தைய அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் அழுத்தத்தில் காணப்பட்ட நிலையில், ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்பட்டன. எனினும் இன்றும் பத்திர சந்தை வலுவாக உள்ளதையடுத்து, பணவீக்கம் பற்றிய கவலைகள் இருந்து வருகின்றன.
தற்போது சென்செக்ஸ் 943.69 புள்ளிகள் அதிகரித்து, 50,043.68 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 272.35 புள்ளிகள் அதிகரித்து, 14,801.50 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications