கடந்த சில வர்த்தக தினங்களாக புதிய உச்சத்தினை தொட்டு வரும் இந்திய பங்கு சந்தைகள் இன்றும், புதிய வரலாற்று உச்சத்தில் தொடங்கியுள்ளது.
இன்று சந்தை ப்ரீ ஒபனிங்லேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 163.73 புள்ளிகள் அதிகரித்து, 44,213.88 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 48 புள்ளிகள் அதிகரித்து 12,974.50 ஆகவும் இருந்துள்ளது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 392.83 புள்ளிகள் அதிகரித்து 44,469.98 ஆகவும், இதே நிஃப்டி 114 புள்ளிகள் அதிகரித்து, 13,040.50 ஆகவும் காணப்பட்டது. இதில் 1421 பங்குகள் ஏற்றத்திலும், 717 பங்குகள் சரிவிலும், 122 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
ஏற்றத்துக்கு இதுவும் ஒரு காரணம்
இது தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்து, கொரோனா தடுப்பூசி குறித்த சாதகமான அறிக்கைகள், சர்வதேச சந்தையின் எதிரொலி உள்ளிட்ட பல காரணங்களினால் இந்திய சந்தைகள் கடந்த சில தினங்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக நவம்பர் மாதத்தில் இதுவரையில் 50,207.35 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அக்டோபர் மாதத்தில் 14,537.40 கோடி ரூபாய் முதலீடுகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு முதலீடுகள் சரிவு
அன்னிய முதலீடுகளின் வரத்து அதிகரித்திருந்தாலும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு குறைந்துள்ளது. சொல்லப்போனால் நவம்பர் 23 நிலவரப்படி -35,587.73 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளன. ஆனால் அக்டோபர் மாதத்தில் 17,318.44 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியது கவனிக்கதக்கது. இது சந்தை புதிய உச்சத்தினை தொட்ட நிலையில், முதலீட்டாளர்கள் புராபிட் செய்துள்ளதால் வந்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகளில், பிஎஸ்இ ஆயில் & கேஸ் மட்டும் சிவப்பு நிறத்தில் உள்ள நிலையில், மற்ற குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றது. நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ்,
ஈச்சர் மோட்டார்ஸ், எம் & எம், மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்டிஎஃப்சி லைஃப், இந்தஸ்இந்த் வங்கி, கெயில், ஜேஎஸ் டபள்யூ, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் எம் & எம், மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி வங்கி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இந்தஸ்இந்த் வங்கி, ரிலையன்ஸ், சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 340 புள்ளிகள் அதிகரித்து, 44417.54 ஆகவும், இதே நிஃப்டி 99 புள்ளிகள் அதிகரித்து, 13,021.80 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது பெரியளவில் மாற்றமில்லாமல் 74.11 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதே முந்தைய அமர்வில் 74.09 ரூபாயாக முடிவடைந்தது கவனிக்கதக்கது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications