மும்பை: தொடர்ந்து புதிய உச்சத்தைக் கண்டு வரும் சென்செக்ஸ், இன்றும் புதிய உச்சத்தைக் கண்டுள்ளது. இந்த நிலையில் நிஃப்டியும் தொடர்ந்து 12,000ல் நிலை கொண்டுள்ளது.
இதே மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 71 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,541 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 15 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,982 ஆக வர்த்தகமாகி வருகிறது.

எனினும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.03 ரூபாயாகவும் வீழ்ச்சியடைந்து வருகிறது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்த போதிலும் சந்தைகள் ஏற்றம் கண்டு வருகிறது.
இதே சென்செக்ஸ் தற்போது 40503 ஆக வர்த்தகமாகி வந்தாலும், 40,640.25 ஆக வர்த்தகமாகி வருகிறது.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடு முழுவதும் உள்ள 1,600 குடியிருப்பு திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளதோடு, கடந்த புதன் கிழமையன்று 25,000 கோடி ரூபாய் நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதில் 10,000 கோடி ரூபாயை மத்திய அரசும், இதே 15,000 கோடி ரூபாயை எல்.ஐ.சியும் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது தவிர எஸ்.பி.ஐயும் இதில் முதலீடு செய்ய உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த புதன் கிழமையன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
அதிலும் இதில் பல திட்டங்கள் முடியும் தருவாயில் இருப்பதாகவும், எனினும் போதிய நிதி பற்றாக் குறையால் அது முடிக்க முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிதியானது ரியல் எஸ்டேட் துறைக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பி.எஸ்.இ இண்டெக்ஸில் மெட்டல், ஆயில் அன்ட் கேஸ் தவிர மற்ற இண்டெக்ஸ்கள் ஏற்றத்திலும், இதே நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி பி.எஸ்.இ இண்டெக்ஸ் மட்டும் சரிவில் காணப்படுகிறது.
இதே நிஃப்டி குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் பேங்க், பார்தி இன்ஃப்ராடெல், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐ.டி.சி மற்றும் டைட்டன் நிறுவனம் நல்ல ஏற்றத்தில் உள்ளதாகவும், இதே டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், கெயில், ஜே.எஸ்.டபள்யூ, யெஸ் பேங்க் டாப் லூசர்களாகவும் காணப்படுகிறது.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் இந்தஸ்இந்த் பேங்க், ஐ.டி.சி, ஹெச்.டி.எஃப்.சி, ரிலையன்ஸ், எஸ்.பி.ஐ உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றத்திலும், இதே டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஓ.என்.ஜி.சி, யெஸ் பேங்க், வேதாந்தா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications