காலையிலேயே தடுமாறும் சென்செக்ஸ்.. அனைத்து குறியீடுகளும் சரிவு..!

வாரத்தின் நான்காவது நாளான இன்றும் இந்திய பங்கு சந்தைகள் சரிவிலேயே காணப்படுகிறது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 128 புள்ளிகள் குறைந்து, 39,794 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 33 புள்ளிகள் குறைந்து, 11,696 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.

இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.03 ரூபாயாக சரிவடைந்து காணப்படுகிறது. கடந்த புதன் கிழமையன்றே ரூபாயின் மதிப்பு 17 சரிவில், 73.87 முடிவடைந்திருந்தது.

காலையிலேயே தடுமாறும் சென்செக்ஸ்.. அனைத்து குறியீடுகளும் சரிவு..!

இந்த நிலையில் நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகிறது.

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், லார்சன், டைட்டன் நிறுவனம், ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், ஹெச் யு எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்டஸ், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், டைட்டன் நிறுவனம், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும் லார்சன், டைட்டன் நிறுவனம், ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.

ஐரோப்பிய மத்திய நாடுகளில் புதிய தூண்டுதல் நடவடிக்கைகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அதிகரித்து வரும் கொரோனா அச்சங்கள் எரிபொருள் தேவையை கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இது இரண்டாம் கட்ட பரவலாக இருக்குமோ என்ற பய உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக பொருளாதாரம் என்னவாகுமோ என்ற பய உணர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் சர்வதேச பங்கு சந்தைகள் சிலவும் சரிவில் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் காணப்படுகிறது.

எல் & டி நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகரலாபம் 118 சதவீதம் அதிகரித்து, 5,520.3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவன பங்கின் விலையானது 4% மேல் அதிகரித்து காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+