நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. நேற்று சற்று ஏற்றத்தினைக் கண்ட நிலையில், இன்று மீண்டும் சரிவானது தொடருகிறது.
அமெரிக்க பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்திருந்தாலும், ஆசிய சந்தைகள் பலவும் ஏற்ற இறக்கத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக இந்திய சந்தைகள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மத்தியில், சரிவில் காணப்படுகின்றன.
அதோடு இது வார இறுதி என்பதாலும், முதலீட்டாளர்கள் தங்களுக்கு கிடைத்த லாபங்களை எடுக்க நினைக்கலாம். புராபிட் புக்கிங் செய்யலாம் என்பதாலும், சந்தையானது இன்று சரிவில் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 68.40 புள்ளிகள் அதிகரித்து, 49,814.61 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 16.60 புள்ளிகள் குறைந்து, 14,857.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. எனினும் தொடக்கத்தில் சென்செக்ஸ் 162.52 புள்ளிகள் குறைந்து, 49,583.69 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 40.90 புள்ளிகள் குறைந்து, 14,832.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 756 பங்குகள் ஏற்றத்திலும், 430 பங்குகள் சரிவிலும். 75 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள சில குறியீடுகள் தவிர, பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், ஹெச்யுஎல், சன் பார்மா, அதானி போர்ட்ஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், யுபிஎல், லார்சன், இந்தஸிந்த் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்யுஎல், சன் பார்மா, ஐடிசி ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், இந்தஸிந்த் வங்கி, லார்சன், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
நேற்றைய முடிவில் சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்திருந்தாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று குறைந்து தான் முடிவடைந்திருந்தது. இந்த நிலையில் இன்று இன்னும் சரியலாமோ என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 55.45 புள்ளிகள் குறைந்து, 49,690.76 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 15.05 புள்ளிகள் குறைந்து, 14,858.75 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications