அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட கொரோனா பரவல்.. 1300 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்..!

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன. முந்தைய அமர்வில் சற்று சரிவினைக் கண்டு இருந்த சந்தையானது, இன்றும் சரிவிலேயே தொடருகிறது.

இந்தியாவினை பொறுத்தவரையில் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட பரவலானது மிக வேகமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆக இது இன்னும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில், நடவடிக்கைகள் கடுமையாக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர இறுதி காலாண்டு அறிக்கைகள் எதிர்பார்ப்பும், பலத்த எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் நிறுவனங்களின் அறிக்கைகளை பொறுத்து தங்களது முதலீடுகளை செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 296.05 புள்ளிகள் குறைந்து, 49,295.27 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 175.90 புள்ளிகள் குறைந்து, 14,659 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 813.07 புள்ளிகள் குறைந்து, 48,778.25 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 245.90 புள்ளிகள் குறைந்து, 14,589 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 386 பங்குகள் ஏற்றத்திலும், 1181 பங்குகள் சரிவிலும். 76 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

பெரும்பாலான குறியீடுகள் சரிவு

பெரும்பாலான குறியீடுகள் சரிவு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பேங்க் நிஃப்டி 4% மேலாகவும், இதே நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப் கூட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள்ஸ், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ ஸ்மால் கேப், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட பங்குகள் 4% க்கு கீழாகவும் வீழ்ச்சியினைக் கண்டுள்ளன. இதே பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ மெட்டல்ஸ், 3% கீழாகவும் வீழ்ச்சிகண்டுள்ளன. மற்றவை 2% க்கு கீழாக வீழ்ச்சி கண்டுள்ளன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், இன்ஃபோசிஸ், டிவிஎஸ் லேப்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸிந்த் வங்கி, எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸிந்த் வங்கி, எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

கடந்த அமர்விலேயே பலத்த சரிவினை கண்டிருந்த, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 1322 புள்ளிகள் குறைந்து, 48,269. புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 388.40 புள்ளிகள் குறைந்து, 14,446.45 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+