காளையா? கரடியா? வார இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகமாகும் சந்தை..!

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன. நேற்று ரமலான் காரணமாக பங்கு சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் உள்ள சாதகமான காரணிகளுக்கு மத்தியில், சந்தை இன்று தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் தொடங்கியிருந்தாலும், பல்வேறு காரணிகள் சந்தைக்கு எதிராகவே உள்ளன. குறிப்பாக இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் என்பது மிக அதிகமாகவே உள்ளது. இது இன்னும் கடுமையாகலாம் என்றே கூறப்பட்டு வருகின்றது.

எனினும் அண்டை நாடுகளின் உதவிகள், தொழில் துறை உற்பத்தி குறித்தான குறியீடு என சந்தைக்கு சாதகமான சில விஷயங்களும் வந்து கொண்டுள்ளன. இதனால் சந்தை தற்போது ஏறுமுகத்தில் காணப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 355.23 புள்ளிகள் அதிகரித்து, 49,046.03 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 53.90 புள்ளிகள் அதிகரித்து, 14,750.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 1.27 புள்ளிகள் அதிகரித்து, 48,692.07 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 13.70 புள்ளிகள் அதிகரித்து, 14,710.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1247 பங்குகள் ஏற்றத்திலும், 278 பங்குகள் சரிவிலும், 100 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி, பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் கூட்ஸ், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ டெக், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் தவிர, மற்ற குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், யுபிஎல், சிப்லா, ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கிரசிம், ஹிண்டால்கோ, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், எம்&எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே, எம்&எம், ஓ.என்.ஜி.சி, டிசிஎஸ், டைட்ட்டன் நிறுவனம், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.45 ரூபாயாக தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் முடிவு விலையானது 73.55 ரூபாயாக இருந்தது. இது தற்போது 73.38 ரூபாயாகவும் காணப்படுகிறது.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 114.66 புள்ளிகள் அதிகரித்து, 48,805.46 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 27.45 புள்ளிகள் அதிகரித்து, 14,711.70 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+