வருட கடைசியிலும் ஜாக்பாட் தான்.. கிட்டதட்ட 14,000 அருகில் நிஃப்டி..!

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தைகளும் தொடர்ந்து ஆறாவது நாளாக ஏற்றம் கண்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், இந்திய சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றன.

இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக ஆசிய பங்கு சந்தைகளும் தொடர்ந்து வரலாற்று உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகி வருகின்றன.

இதற்கிடையில் தொடக்கத்தில் சற்று சரிவினை கண்டன. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 106.53 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 47,369.69 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 31.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 13,950.30 ஆகவும் இருந்தது.

என்ன காரணம்

என்ன காரணம்

இது தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்து, கொரோனா தடுப்பூசி குறித்த சாதகமான அறிக்கைகள், சர்வதேச சந்தையின் எதிரொலி உள்ளிட்ட பல காரணங்களினால் இன்று இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதற்கிடையில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 16 பைசா அதிகரித்து, 73.15 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 73.31 ரூபாயாக முடிவடைந்திருந்தது.

முதலீட்டாளர்கள் நம்பிக்கை

முதலீட்டாளர்கள் நம்பிக்கை

முதலீட்டாளர்கள் பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும் என்ற நம்பிக்கைக்கு மத்தியில், குறைந்த விலையில் உள்ள பங்குகளை வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக இந்திய பங்கு சந்தைகள் தொடர்ச்சியான ஏற்றத்தினை கண்டு வருகின்றன. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக FII & DII வரத்தும் அதிகரித்துள்ளது.

வர்த்தக உபரி அதிகரிப்பு

வர்த்தக உபரி அதிகரிப்பு

அதோடு இந்தியாவின் நடப்பு கணக்கு உபரி ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 15.5 பில்லியன் டாலராக சுருங்கியுள்ளது. இது கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 19.2 பில்லியன் டாலராக இருந்தது. இது தற்போது குறைந்திருந்தாலும், கடந்த ஆண்டில் இதே காலத்தில் 1.1 சதவீத பற்றாக்குறை இருந்த நிலையில், இந்த ஆண்டு 2.4 சதவீதம் உபரி உள்ளதை ரிசர்வ் வங்கி தரவு காட்டுகிறது.

இதற்கிடையில் நிஃப்டி ஐடி, பிஎஸ்இ எஃப்எம்சிஜி, மெட்டல்ஸ், ஆயில் & கேஸ், டெக் உள்ளிட்ட குறியீடுகள் தவிர, மற்ற குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.

 

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஹெச்டிஎஃப்சி, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, சிப்லா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஸ்ரீ சிமெண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், எண்டிபிசி, கிரசிம், கெயில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, ஓ என் ஜி சி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே அல்ட்ராடெக் சிமெண்ட், எண்டிபிசி, பவர் கிரிட் கார்ப், ஆக்ஸிஸ் வங்கி, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 60 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 47,806.78 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 11.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 13,993.50 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 0.19 சதவீதம் அதிகரித்து, 73.21 ரூபாயாக அதிகரித்துள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+