கிட்டதட்ட 44,000 தொட்ட சென்சென்ஸ்.. நிஃப்டியும் நல்ல ஏற்றம்.. என்ன காரணம்..!

அமெரிக்க பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில் இந்திய பங்கு சந்தைகளும் ஏற்றத்திலேயே தொடங்கியுள்ளன.

நேற்று இந்திய சந்தைகளுக்கு விடுமுறை நாளாக இருந்த நிலையில், இன்று இந்த
வாரத்தின் முதல் சந்தை நாளாக உள்ளது.

இன்று சந்தை ப்ரீ ஒபனிங்லேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 28.01 புள்ளிகள் ஏற்றம் கண்டு,
43,665.997 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 125.60
புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,905.90 ஆகவும் இருந்தது.

என்ன காரணம்

என்ன காரணம்

இது தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்து, கொரோனா தடுப்பூசி குறித்த சாதகமான அறிக்கைகள், சர்வதேச சந்தையின் எதிரொலி உள்ளிட்ட பல காரணங்களினால் இன்று இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகளில், பிஎஸ்இ ஹெல்த்கேர், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் தவிர, மற்ற குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.

 

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பிபிசிஎல், ஹீரோ மோட்டோகார்ப், டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், ஹெச்சிஎல் டெக், சிப்லா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

இதே சென்செக்ஸ் குறியீட்டில் டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்தஸ்இந்த் வங்கி, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஆட்டோ, டெக் மகேந்திரா, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 309.66 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 43,947.64 ஆகவும், இதே நிஃப்டி 82.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 12,862.75 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.

இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 0.22 சதவீதம் அதிகரித்து, 74.43 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த வர்த்தக தினத்தில் 74.67 ரூபாயாக சரிந்து காணப்பட்டது கவனிக்கதக்கது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+