வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று பலத்த சரிவுக்கு பிறகு சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
கடந்த சில வர்த்தக அமர்களாகவே தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வரும் இந்திய பங்கு சந்தைகள், இன்று சற்று ஏற்றம் காண தொடங்கியுள்ளன.
இன்று காலை ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 100.69 புள்ளிகள் குறைந்து, 49,845.01 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 45.50 புள்ளிகள் அதிகரித்து 14,721.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
சந்தை தொடக்கம்
இதனையடுத்து சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 225.67 புள்ளிகள் அதிகரித்து 49,969.99 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 68.30 புள்ளிகள் அதிகரித்து 14,744 புள்ளிகளாகவும் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் 1,032 பங்குகள் ஏற்றத்திலும், 265 பங்குகள் சரிவிலும், 52 பங்குகள் மாற்றம் இல்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கு இடையில் நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் சில குறியீட்டில், நிஃப்டி ஆட்டோ தவிர, பெரும்பாலான குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், கெயில், பிபிசிஎல், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், யுபிஎல், கோடக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, லார்சன், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி, எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 29.13 புள்ளிகள் அதிகரித்து, 49,773.45 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 17 புள்ளிகள் அதிகரித்து, 14,692.70 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது. பொருளாதாரம் மீண்டு வரலாம் என்ற நம்பிக்கைக்கு மத்தியில், இந்திய சந்தைகள் தொடக்கத்தில் ஏற்றம் கண்டு வருகிறது. எனினும் சில சர்வதேச துறை சார்ந்த செய்திகள் பலவற்றையும் கண்கானிக்க வேண்டும். அதோடு அதிகரித்து வரும் பத்திர சந்தையும் கவனிக்கதக்க ஒரு விஷயமாகும்.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications