வாரத்தின் கடைசி நாளான இன்றும் இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன.
அதோடு இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 189.22 புள்ளிகள் அதிகரித்து, 50,803.51 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 9.60 புள்ளிகள் அதிகரித்து, 14,905.30 ஆகவும் இருந்தது.

இதனையடுத்து சந்தை தொடக்கத்திலும் பலமான ஏற்றத்துடன் தான் தொடங்கியது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 256.86 புள்ளிகள் அதிகரித்து, 50,880.15 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 69.40 புள்ளிகள் அதிகரித்து, 14,965.10 ஆகவும் வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதனையடுத்து 979 பங்குகள் ஏற்றத்திலும், 243 பங்குகள் சரிவிலும், 43 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
இதற்கிடையில் நிஃப்டி ஐடி, ஆட்டோ, பிஎஸ்இ, இதே சென்செக்ஸ் குறியீட்டில் மிட் கேப், கேப்பிட்டல் கூட்ஸ், ஹெல்த்கேர், எஃப்எம்ஜிசி, மெட்டல்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் தவிர, மற்றவை அனைத்தும் பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள எஸ்பிஐ, கோடக் மகேந்திரா, இந்தஸிந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, மாருதி சுசூகி, ஜெஎஸ்டபள்யூ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எஸ்பிஐ, கோடக் மகேந்திரா, இந்தஸிந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், பார்தி ஏர்டெல், மாருதி சுசூகி, எம்&எம், பவரி கிரிட் கார்ப், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
அமெரிக்கா பங்கு சந்தைகள் ஏற்றம், பட்ஜெட் 2021 எதிரொலி, அன்னிய முதலீடுகள் வரத்து உள்ளிட்ட பல காரணங்களினால் சந்தை தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வருகின்றது. அதோடு இன்று நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி தள்ளுபடி இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. இதுவும் சந்தையின் ஏற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 268.52 புள்ளிகள் அதிகரித்து, 50,8882.81 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 69.70 புள்ளிகள் அதிகரித்து, 14,965.35 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications