வாரத்தின் இறுதி நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியான சரிவினைக் கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள், இன்று ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 195 புள்ளிகள் அதிகரித்து 39,945 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 62 புள்ளிகள் அதிகரித்து, 11,733 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று இன்னும் வர்த்தகம் தொடங்கவில்லை. எனினும் கடந்த வியாழக்கிழமையன்று 74.10 ரூபாயாகவே சரிவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது..

கடந்த சில தினங்களாகவே சரிவினைக் கண்டு வந்த அனைத்து குறியீடுகளும், இன்று நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் இன்று பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பிபிசிஎல், கோல் இந்தியா, ஐஓசி, அதானி போர்ட்ஸ், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசூகி, பவர் கிரிட் கார்ப், ஈச்சர் மோட்டார்ஸ், ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எண்டிபிசி, நெஸ்டில், ஹெச்சிஎல் டெக், ஓஎன்ஜிசி, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசூகி, பவர் கிரிட் கார்ப், கோடக் மகேந்திரா, ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இன்று காலையில் சற்று சரிவில் தொடங்கி, பின் தற்போது ஏற்றம் காண ஆரம்பிக்கிறது. தற்போது 554 பங்குகள் ஏற்றத்திலும், 285 பங்குகள் சரிவிலும், 52 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
ஆசிய பங்கு சந்தைகள் கடந்த மூன்று தினங்களாகவே சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.
அமெரிக்காவில் வரவிருக்கும் தேர்தல் காரணமாக, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று வலுவடைந்து காணப்படுகிறது.
.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இது இரண்டாம் கட்ட பரவலாக இருக்குமோ என்ற பய உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications