பொதுத்துறை வங்கிகளின் கடன் பிரச்சனைகளைத் தீர்க்கவும், அதன் வர்த்தகத்தை மேலும் விரிவாக்கம் செய்யவும் நிதியமைச்சகம் 2.11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொரகையை நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் மும்பை பங்குச்சந்தையில் வங்கி பங்குகளின் உயர்வுக்குப் பெரிய அளவில் உதவி செய்துள்ளது.
வங்கி பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் மத்திய அரசின் நிதியுதவியின் மூலம் பொதுத்துறை வங்கி பங்குகள் அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது. இதில் குறிப்பாகப் பஞ்சாப் நேஷ்னல் வங்கி 46.20 சதவீதமும், எஸ்பிஐ 26.58 சதவீதம், பாங்க் ஆஃ பரோடா 31.47 சதவீதம், பாங்க் ஆஃப் இந்திய 25 சதவீதம், கனரா வங்கி 38.05 சதவீதம் வரையில் வரலாறு காணாத வகையில் ஒரு நாள் உயர்வைச் சந்தித்துள்ளது.
சாலைத் திட்டம்..
அதேபோல் நேற்று மத்திய அரசு அறிவித்த 85,000 கிலோமீட்டர் நெடுஞ்சாலை திட்டத்தின் மூலம் இன்று பல முன்னணி கட்டுமான நிறுவனங்களின் பங்குகள் உயரத் துவங்கியது.
மும்பை பங்குச்சந்தை
இந்த இரு அறிவிப்புகளுக்குப் பின் இன்று வர்த்தகத் துவங்கிய முதல் தொடர்ந்து உயர்வை சந்தித்து 33,098 புள்ளிகள் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மிகழ்ச்சியில் ஆழ்த்தியது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத் துவக்கம் முதல் தொடர்ந்து உயர்வை சந்தித்த மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு ஐரோப்பிய சந்தையில் அதிகளவில் உயர்ந்தது.
இதன் மூலம் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 435.16 புள்ளிகள் உயர்ந்து 33,042.50 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டை போல் இன்று நிஃப்டி குறியீடு 87.65 புள்ளிகள் உயர்ந்து 10,295.35 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications