புதன்கிழமை பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை சிறப்பான வர்த்தகத்தைப் பெற்ற நிலையில், வியாழக்கிழமை நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் குறைவான விற்பனை அளவின் காரணமாகச் சென்செக்ஸ் குற
புதன்கிழமை பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை சிறப்பான வர்த்தகத்தைப் பெற்ற நிலையில், வியாழக்கிழமை நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் குறைவான விற்பனை அளவின் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு மந்தமான வர்த்தகத்தைப் பெற்றது.

இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் சரிவை கண்டது.
இதனால் வியாழக்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே பங்குச்சந்தையின் வர்த்தகம் மந்தமான காணப்பட்ட நிலையில், ஐரோப்பிய சந்தையின் வர்த்தகம் துவங்கிய பின் வர்த்தகம் உயர்வு நிலையைக் கண்டது.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 84.97 புள்ளிகள் உயர்ந்து 28,226.61 புள்ளிகளை எட்டியது, சென்செக்ஸ் குறியீட்டை போல் மந்தமான வர்த்தகத்தைப் பெற்ற நிஃப்டி குறியீடு 17.85 புள்ளிகள் உயர்ந்து 8,734.25 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications