வெறும் 44 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்..!
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு உயர்வுடன் காணப்பட்டாலும் வர்த்தக முடிவில் ஐடி, வங்கி, எப்எம்ஜிசி மற்றும் ஹெல்த்கேர் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் வர்த்தக முடிவில் வெறும் 43 புள்ளிகள் மட்டுமே உயர்வடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கணிசமான முதலீடு உடன் 150 புள்ளிகள் வரை உயர்ந்தாலும், வர்த்தக முடிவில் வெறும் 13 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து காணப்பட்டது.
இந்நிலையில் மாலை 3.30 மணிக்கு வர்த்தகம் முடிந்த நிலையில் சென்செக்ஸ் குறியீடு 43.84 புள்ளிகள் உயர்ந்து 26,394.01 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 15.25 புள்ளிகள் உயர்ந்து 8,142.15 புள்ளிகளை அடைந்து செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.



Click it and Unblock the Notifications